TamilSaaga

“சிங்கப்பூரில் 6 வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தில் தொற்று குழுமம்” : 266 பேர் பாதிப்பு – முழு விவரம்

சிங்கப்பூரில் இரண்டு புதிய பெருந்தொற்று கிளஸ்டர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) பதிவாகியுள்ளன. பூன் லே பஸ் இண்ட்சேஞ்ச் ஊழியர்களுடனும் ஒன்றும்ம் மற்றொன்று நெய்தல் சாலையில் உள்ள ஒரு தங்குமிடத்திலும் பதிவாகி உள்ளது. பூன் லே பஸ் இண்ட்சேஞ்ச் கிளஸ்டரில் 7 புதிய வழக்குகள் உள்ளன. மேலும் அதன் மொத்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இது பேருந்து பரிமாற்றத்தில் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஏழாவது நடப்பில் உள்ள கிளஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று புதிய வழக்குகள் 119 நெய்தல் சாலையில் உள்ள ஒரு தங்குமிடத்துடன் இணைக்கப்பட்டுள்ளன எனபதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த கிளஸ்ட்டரில் 4 வழக்குகள் பதிவாகியுள்ளது. சுகாதார அமைச்சகம் (MOH) இந்த வார தொடக்கத்தில் ஜூரோங் ஈஸ்ட் பஸ் இண்ட்சேஞ்ச், க்ளெமென்டி பஸ் இன்டர்சேஞ்ச் மற்றும் புங்கோல், டோ பயோ பேருந்துச் சந்தைகளில் கிளஸ்டர்களை குறித்து அறிவித்தது.

நெய்தல் சாலை தங்கும் விடுதியைத் தவிர, பெருந்தொற்று கொத்துகள் கொண்ட ஆறு தங்குமிடங்கள் உள்ளன. அவை துவாஸ் சவுத் லாட்ஜ், நார்த் கோஸ்ட் லாட்ஜ், வெஸ்ட்லைட் ஜூனிபர் மற்றும் வெஸ்ட்லைட் மண்டை தங்குமிடங்களாகும். ஹோம்ஸ்டே லாட்ஜ் மற்றும் 43 சுங்கேய் காட் லூப் தங்குமிடதில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மொத்தமாக 266 வழக்குகள் வவெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிட விடுதிகளில் பதிவாகி உள்ளது.

Related posts