TamilSaaga

சிங்கப்பூரில் முதன் முதலில் வந்திறங்கிய “பெரியார்”.. புது Rolls-Royce கார் வாங்கி அழைத்துச் சென்ற “பெரிய பழுவேட்டரையர்” சரத்குமாரின் தாத்தா – வரலாறு!

தமிழ்நாட்டின் மிக முக்கியமான நடிகர்களில் சரத்குமாரும் ஒருவர். வில்லனாக திரைத்துறையில் அறிமுகமாகி ஹீரோவாக ஜொலித்தவர். பாடி பில்டராக இருந்த சரத்குமார், பத்திரிகையாளராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

இவர் நடித்த “சூர்யவம்சம்” படத்துக்கு சோறு கட்டிக் கொண்டு மாட்டு வண்டிகளில் சென்று மக்கள் படம் பார்த்த வரலாறு உண்டு. “சுப்ரீம் ஸ்டார்” என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் சரத்குமாருக்கு வயது 67. 1954-ல் பிறந்தவர் இவர். ஆனால், இன்னமும் கட்டுமஸ்தான உடம்போடு, முறுக்கிய மீசையோடும் இருக்கும் ஒரே நடிகர் இவர் தான். தற்போது வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் “பொன்னியின் செல்வன்” படத்தில் பெரிய பழுவேட்டரையராக சில காட்சிகளில் வந்தாலும், அலட்டிக் கொள்ளாத நடிப்பாலும், மிரட்டும் பாடி லாங்குவேஜிலும், வில்லத்தனமான பார்வையிலும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.

இவர் வயதையொற்ற மற்ற நடிகர்கள் பலர் தளர்ந்து விட்டனர். ஆனால், இவர் மட்டும் Physically இன்னும் பிரம்மிப்பூட்டுகிறார். சரி விஷயத்துக்கு வருவோம்!

நடிகராக அசத்திய சரத்குமார் பிறகு சமத்துவ மக்கள் கட்சி எனும் பெயரில் கட்சி ஆரம்பித்து, தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒரு பாடி பில்டராக, நடிகராக, அரசியல்வாதியாக தெரிந்த சரத்குமாரின் மறுபக்கம் ஒன்று உள்ளது. அது இவரது பாரம்பரியமான குடும்பத்தைப் பற்றியது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பிரசவத்தில் துடித்த பெண்.. குழந்தை தலையை சுற்றிய தொப்புள்கொடி.. விதிகளை தகர்த்து சீறிப்பாய்ந்த டாக்சி டிரைவர் – கிளைமேக்சில் நடந்த ட்விஸ்ட்!

சரத்குமாரின் தாத்தா ஓ.ராமசாமி கடவுள் பக்தி அதிகம் கொண்டிருந்தவர். குடுமி கூட வைத்திருந்தவர். ஆனால், பின்னாளில் பெரியாரின் பேச்சாலும், கொள்கைகளாலும் கவரப்பட்டார். குடுமி வைத்து இருந்தவர், கோட் சூட்டுக்கு மாறினார். பெரியாரின் மிகப்பெரிய பக்தராக உருவெடுத்தார்.

அதுமட்டுமல்ல, சிங்கப்பூருக்கு முதன் முதலாக பெரியார் வந்திறங்கிய போது, சரத்குமாரின் தாத்தா புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கி, அதில் பெரியார் அவர்களை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்றார். இந்த தகவலை நடிகர் ‘சித்ரா லக்ஷ்மணின்’ யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த போது, சரத்குமாரே பதிவு செய்திருக்கிறார்.

சரத்குமார் பேசிய வீடியோவை காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

பெரியாரை ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏற்றி சிங்கப்பூரில் உள்ள தனது வீட்டிற்கே அழைத்துச் சென்ற சரத்குமாரின் தாத்தா, மதிய உணவு மற்றும் இரவு உணவு விருந்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். அந்த அளவுக்கு பெரியாரின் அபிமானியாக இருந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு பெரும் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் சரத்குமார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான்.

Related posts