TamilSaaga

பயணிகளுக்கு ‘சர்பிரைஸ்’ அறிவிப்பு… 2 வருடங்களுக்கு பிறகு.. சிங்கை Seletar விமான நிலையம் இன்று மீண்டும் திறப்பு.. சீறிப்பாய்ந்த விமானம்!

சிங்கப்பூரின் செலிடார் (Seletar) விமான நிலையம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வணிக விமான போக்குவரத்து சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது, இது விமானத் துறையின் இயல்பு நிலைக்கு மற்றொரு முன்னேற்ற படியாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் இந்த விமான நிலையம் குறிக்கும் வகையில், முதல் விமானமாக மலேசிய பட்ஜெட் கேரியர் Firefly-யின் FY3124, இன்று (ஜூன் 13) காலை 8.50 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கியது. 72 இருக்கைகள் கொண்ட டர்போபிராப் விமானத்தில் 59 பயணிகள் இருந்தனர்.

Firefly தினமும் நான்கு விமானங்களை இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையே இரு மார்க்கத்திலும் இரு விமானங்களை இயக்க உள்ளது.

மேலும் படிக்க – “சிங்கத்தின் சிம்மாசனம்”… இன்று சிங்கப்பூரின் Acting பிரதமராக பதவியேற்கும் லாரன்ஸ் வோங் – விடுமுறையில் பிரதமர் லீ!

மார்ச் 16, 2020 அன்று கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியபோது சிங்கப்பூருக்கான விமானங்களை இயக்குவதை Firefly நிறுத்தியது. கோவிட்-19-க்கு முன்னர், செலிடார் விமான நிலையத்திற்கும் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திற்கும் இடையில் தினமும் இரு மார்க்கத்திலும் ஆறு விமானங்களை இயக்கியது.

Firefly நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிலிப் சீ Seletar விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், “Firefly விமானத்தைப் பயன்படுத்தி மூன்று மணி நேரத்திற்குள் பயணிகள் கோலாலம்பூரில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் உள்ள தங்களுடைய குடியிருப்புகளை அடையலாம்” என்றார்.

சாங்கி ஏர்போர்ட் குரூப் (சிஏஜி) சாங்கி விமான நிலையம் மற்றும் செலிடார் விமான நிலையம் இரண்டையும் நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts