TamilSaaga

“சிங்கப்பூரில் எம்பிளாய்மண்ட் பாஸ், S பாஸ் தகுதி அடிப்படை கடுமையாகும்” – பிரதமர் லீ விளக்கம்

சிங்கப்பூரில் வேலை பாஸ் எனப்படும் Employment Pass மற்றும் S Pass உள்ளிட்ட பாஸ்களுக்கான தகுதிகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று நேற்று வெளியிட்ட தேசிய தின பேரணி உரையில் நமது பிரதமர் லீ கூறினார். மேலும் இந்த உடனடியாக அமல்படுத்தப்படாது என்றும், படிப்படியாகவே அமலுக்கு வரும் என்றும் பிரதமர் லீ தெளிவாக கூறினார். உடனடியாக தகுதிகள் கடுமையாக்கப்பட்டால் வணிகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் வேலைவாய்ப்பை பொறுத்தவரை கடந்த ஆண்டை பார்க்கையில் வெளிநாட்டு பணியாளர்களின் பங்கு குறையும்போது உள்நாட்டு பணியாளர்களின் வேலை இழப்பு என்பது குறைந்து வருகின்றது என்றும் பிரதமர் கூறினார். வேலையிடங்களில் வேலைவாய்ப்புகளுக்கான போட்டிகள் நிலவுவது சகஜம் தான் என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வேலைகளுக்கு நிலவும் போட்டி, வேலை பாஸ், S பாஸ் உள்ளிட்டவற்றின் தரம் ஆகியவற்றில் நமது சிங்கப்பூர் மக்கள் கொண்டிருக்கும் கவலை காரணமாகவே இந்த பாஸ்களின் தகுதி கடினமாக்கப்படுகிறது என்று தேசிய தின பேரணி உரையில் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் அண்மையில் நியூஸிலாந்து நாட்டிற்கு தனது எல்லைகளை கடுமையாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிற நாட்டு தொழிலாளர்களுக்கு தனது எல்லைகளை விரைவில் திறக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சில ஊழியர்கள் இந்தியாவில் இருந்து மிகுந்த பாதுகாப்போடு சிங்கப்பூர் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts