TamilSaaga

சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த பயணிக்கு நெஞ்சுவலி… 4 மணி நேர மரண போராட்டம்.. உயிரைக் காப்பாற்றிய “சென்னை” – 317 சக பயணிகள் காட்டிய “பேரன்பு” !’

தமிழர்களுக்கு இருக்கும் மனிதநேயம் என்பதை சொல்லால் வடிக்கவே முடியாது. ஒவ்வொருவருக்குமே அதன் பலன் என்னவோ மிகப்பெரியதாக தான் அமைந்து இருக்கும். அந்த மாதிரியான ஒரு சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சிங்கப்பூரை நோக்கி விமானம் ஒன்று 318 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. சுமுகமாக சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த நேரத்தில் அதில் இருந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கென்னடி என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்த பயணி நெஞ்சு வலியால் துடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: குடும்ப கஷ்டத்திற்காக சிங்கப்பூரில் ஓயாத வேலை… 39 வயதில் நடக்க இருந்த திருமணம்… மயங்கி விழுந்த இடத்தில் உயிரிழந்த தமிழர்!

அவருக்கு விமான பணிப்பெண்கள் தொடர்ந்து முதலுதவிகள் கொடுத்து பார்த்திருக்கின்றனர். இந்த தகவல் உடனடியாக விமானிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த நேரத்தில் விமானம் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மேலே பறந்து கொண்டு இருந்தது. முதலுதவி கொடுக்கப்பட்ட கென்னடியின் நிலை அறிந்த விமானி, உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு மருத்துவ காரணத்துக்காக விமானத்தினை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டு இருக்கிறார்.

இந்த தகவலை கேட்ட சென்னை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக விமானத்தினை தரையிறக்க அனுமதி கொடுத்தனர். பாதிக்கப்பட்ட பயணிக்காக மருத்துவர் கொண்ட குழு ஒன்று தயாராக இருக்குமாறு பார்த்து கொண்டனர். இதையடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மருத்துவ குழு கென்னடிக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையை தொடங்கி அவரை பரிசோதித்தனர்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கெத்து காட்டிய புதுக்கோட்டை சிங்கங்கள்… அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருந்துச்சா… 24 டீமை அடித்து நொறுக்கி சாம்பியனான சுவாரஸ்யம்

மருத்துவர் குழு கென்னடிக்கு ஏற்பட்டு இருப்பது கடுமையான நெஞ்சுவலி என்றும் உடனடியாக அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என்றும் அறிவுரை கூறப்பட்டது. இதை தொடர்ந்து குடியுரிமை அதிகாரிகள் கென்னடிக்கு அவசரகால மருத்துவ விசா வழங்கினர். இதை தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அவர் அட்மிட் செய்யப்பட்ட விபரம் குறித்து விமான நிறுவன அதிகாரிகள், அமெரிக்க நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விமானம் 4 மணி நேர தாமதத்துக்கு பின்னர் 317 பயணிகளுடன் சிங்கப்பூர் வந்து சேர்ந்தது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts