TamilSaaga

சிங்கப்பூர் செல்ல நினைக்கும் ஊழியரா நீங்க… அப்போ இந்த தகவலை மிஸ் செய்யாமல் தெரிஞ்சிக்கோங்க.. வாழ்க்கையே செம எளிதாக்கிடும்!

சிங்கப்பூரில் வேலைக்கு வர பாஸ் எடுக்கும் வழி தான் பலருக்கு எளிதில் தெரிந்து விடும். கேன்சல் செய்யும் யுத்தி பலருக்கு தெரிவதே இல்லை. இதை தெரிந்து கொண்டாலே பல சிக்கல்களில் இருந்து தப்பித்து விடலாம். கேன்சல் செய்யும் குழப்பம் உங்களுக்கும் இருந்தால் இந்த பதிவினை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கை வர நினைக்கும் ஊழியர்கள் சிலர் S-Pass, E-Pass மற்றும் Dependent visa அப்ளே செய்திருப்பார்கள். ஆனால் காரணம் சிலவற்றால் திடீரென கேன்சல் செய்ய வேண்டிய நிலை வரும். அப்போதைய சூழலில் ஒரு வெப்சைட்டின் உதவியை கொண்டு மொத்த பிரச்னையையும் தீர்த்துவிட முடியும். ஆனால் இதிலும் ஒரு சில கட்டுபாடுகள் இருக்கிறது. அது குறித்து முதலில் தெரிந்து கொண்டு இதனை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: Exclusive: சிங்கப்பூர் செல்ல Skilled டெஸ்ட்… இன்றைய நிலை என்ன? இன்ஸ்டியூட் சொல்லும் தகவல்… ஒரு நல்ல செய்தி..! ஒரு கெட்ட செய்தி!

சிங்கப்பூர் வர EP, S pass, dependent visa அல்லது long term pass என பலவகையான பாஸ்கள் விண்ணப்பிக்க முதலாளிகள் அல்லது Employment Agency மட்டுமே myMOM போர்ட்டலைப் பயன்படுத்த முடியும். பாஸை வழங்குவதற்கும் அல்லது ரத்து செய்யவதற்கும் (Work Permit அனுமதி தவிர அனைத்து பாஸ் வகைகளும்) அல்லது EP அல்லது S passப் புதுப்பிக்கவும் இதைப் பயன்படுத்த முடியும். இந்த சர்வீஸ்கள் எல்லாம் தற்போது EP Onlineல் இருந்து myMOM போர்ட்டலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், பாஸ் தொடர்பான பிற பரிவர்த்தனைகள் (எடுத்துக்காட்டாக TEP, Dependent visa அல்லது Long term visa புதுப்பித்தல்) ஆகியவற்றுக்கு தொடர்ந்து EP Onlineஐ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். myMOM போர்ட்டல் நிறுவன முதலாளிகள் அல்லது Employment Agency, MOM eServicesஐ ஒரே லாகினில் பார்க்கவும் அனுமதித்து இருக்கிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில Class 4 license எடுக்க போறீங்களா? வெயிட்… எவ்வளவு கட்டணம்? யாருக்கெல்லாம் எடுக்கவே முடியாது… இதை தெரிஞ்சிக்கிட்டு கிளம்புங்க..!

ஊழியர்களின் விண்ணப்பச் செயல்பாடுகளில் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் பாஸ் ஸ்டேட்டஸ் மற்றும் தொடர்புடைய அடுத்த கட்டத்தினை குறித்தும் பார்க்கலாம். myMOM போர்ட்டலைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குப் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு நீங்கள் பணம் செலுத்தவும் முடியும். GIRO (உங்களிடம் ஏற்கனவே EP ஆன்லைனுக்கான GIRO ஏற்பாடு இருந்தால் மட்டுமே) மாஸ்டர்கார்டு அல்லது விசா கார்டின் மூலமும் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EP அல்லது SP விண்ணப்பிக்க தேவையான விவரங்களுக்கு myMOM portalல் candidate’s formஐ பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தேவையான தகவல்களை சேகரிக்க விண்ணப்பதாரருக்கு நீங்கள் பார்ம்மினை மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts