TamilSaaga

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வர தயாராகிட்டிங்களா? Changi Airportல் எந்த வகை Pass வைத்திருப்பவர்களுக்கு PCR தேவை? – இது தெரிஞ்சுக்கலைனா சிக்கல் தான்

சிங்கப்பூர் வரும் பயணிகள் குறிப்பாக தமிழகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு Entry Approval இல்லாமல் தங்கள் பயணத்தை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது (குறிப்பிட்ட வகை பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்) என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உள்நாட்டில் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் இந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பல தளர்வுகளை சிங்கப்பூர் அரசு தொடர்ந்து அறிவித்து வருகின்றது.

சிங்கப்பூரின் “வாழைப்பழங்களின் ராஜா” காலமானார் : வருத்தத்தில் வாடிக்கையாளர்கள் – இக்கட்டான நிலையில் தாய் முன்வைத்த கோரிக்கை!

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து சிங்கப்பூர் வந்திறங்கும்போது Changi விமான நிலையத்தில் யாரெல்லாம் கட்டாயம் PCR சோதனை எடுக்க வேண்டும். அதே போல யாரெல்லாம் PCR சோதனை எடுக்க வேண்டாம் என்பதில் பயணிகளுக்கு இன்றளவும் சிறிய குழப்பங்கள் உள்ளது. அதை தெளிவுபடுத்தும் வகையில் இந்த பதிவில் சில தகவல்கள் பின்வருமாறு அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தேதிக்கு VTL மூலம் சிங்கப்பூர் வரும் S Pass, Dependent Pass, Employment Pass மற்றும் Long Time Pass வைத்திருப்பவர்களில் “Visa Card” உள்ளவர்களுக்கு Changi Airportல் PCR சோதனை எடுக்கப்படுவதில்லை. அவர்கள் சிங்கப்பூர் வந்திறங்கிய பிறகு நேரடியாக வீட்டிற்கு செல்லலாம். அவர்கள் வீட்டுக்கு சென்றது ART சோதனை மேற்கொண்டு அரசிடம் அறிவிக்க வேண்டும்.

“இந்தோனேசியாவில் நிலநடுக்கம்” : சிங்கப்பூரிலும் பல இடங்களில் உணரப்பட்ட அதிர்வு – எச்சரிக்கும் SCDF மற்றும் SPF

ஆனால் அதே நேரத்தில் S Pass, Dependent Pass, Employment Pass மற்றும் Long Time Pass வைத்திருப்பவர்களில் புதிய IPA வைத்திருப்பவர்களுக்கு கட்டாயம் PCR சோதனை எடுக்கப்படும். அதன் பிறகு தான் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். ஆகவே மேற்குறிப்பிட்ட இந்த வகையில் தான் பயணிகள் பிரிக்கப்பட்டு PCR சோதனை மேற்கொள்ளப்படுகின்றன.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600223091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts