TamilSaaga

குடும்ப கஷ்டத்திற்காக சிங்கப்பூரில் ஓயாத வேலை… 39 வயதில் நடக்க இருந்த திருமணம்… மயங்கி விழுந்த இடத்தில் உயிரிழந்த தமிழர்!

சிங்கப்பூரில் குடும்ப கஷ்டத்திற்காக வேலை செய்து வந்த தமிழக ஊழியரின் வாழ்க்கை சில மணி நேரங்களில் முடிந்தது அனைவரிடத்திலும் கலக்கத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

Heatec Jietong Pte என்ற நிறுவனத்தின் கப்பல் கட்டுமான துறையில் வேலை செய்து வந்தவர் சீனிவாசன். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த இவர் கடந்த வருடம் pcm பெர்மிட்டில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: நேற்று (டிச.26) சிங்கப்பூரில் இருந்து திருச்சி கிளம்பிய விமானம்.. 4 மணி நேர பயணம்.. லேண்ட் ஆன பிறகு கண் விழித்த பயணிகளுக்கு காத்திருந்த ஏமாற்றம்! “மாநாடு” பட கதையை கண்முன்னே காட்டிய FlyScoot!

இந்த கம்பெனியில் சேர்ந்து 7 மாதம் மட்டுமே ஆகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக 10 வருடத்திற்கு முன்னரே இவரின் அண்ணன் வாசுதேவன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். அவரின் சிபாரிசின் பெயரில் தான் சீனிவாசன் இங்கு வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

வேலை முடித்து விட்டு பிப்.6ந் தேதி தங்குமிடத்திற்கு வந்திருக்கிறார் சீனிவாசன். குளிக்க சென்றவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் சேர்த்தாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 8.35 மணிக்கு இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாசுதேவன் அவரை காண மருத்துவமனை விரைந்தும் தம்பியை பிணமாக தான் பார்க்கப் முடிந்ததாம். தன்னுடைய தம்பிக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருந்ததாக வாசுதேவன் சொல்லி அழுதது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் காணாமல் போன தமிழக ஊழியர்… 8 நாட்கள் கழித்து சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்… உட்கார்ந்த நிலையில் உயிரை விட்ட கபடி வீரர்..!

இன்று டிச.9 சிங்கப்பூரில் இருந்து சீனிவாசனின் உடலை விமானத்தில் சொந்த ஊருக்கு எடுத்து செல்கின்றனர். கூடவே வாசுதேவனும் அவருடன் செல்ல இருக்கிறார். பணியிடத்தில் இறக்காததால் இழப்பீட்டு தொகை கிடைக்காது என கம்பெனி தெரிவித்தாலும் நல்லெண்ண அடிப்படையில் ஒரு தொகை கொடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணியில் இருந்த ஊழியர்களும் இணைந்து 2400 சிங்கப்பூர் டாலர் வரை திரட்டி வாசுதேவன் கையில் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. குடும்ப சூழ்நிலைக்காக சிங்கப்பூர் வந்து 39 வயதில் தன்னுடைய வாழ்க்கையை வாழ இருந்த சீனிவாசன் இறப்பு அங்கிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தான் என்கின்றனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts