TamilSaaga

சிங்கப்பூர் வருவதற்கு skilled test தரும் சம்பளத்தில் இன்னொரு பாஸ் இருக்கு… ஆனா இது மட்டும் கொஞ்சம் changeஆம்… இத தெரிஞ்சிக்கிட்டு இன்ஸ்ட்டியூட் போங்க

சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆசைப்படும் பலருக்கும் நிறைய குழப்பம் இருக்கும். என்ன செய்யலாம். எப்படி வேலைக்கு போகலாம் என தொடர்ந்து குழப்பத்திலேயே இருப்பார்கள். அப்படி ஒரு குழப்பம் உங்களுக்கும் இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூரில் பல வகையான பாஸ்கள் நடைமுறையில் இருக்கிறது. ஏஜென்ட்டின் உதவியோடு செல்லும் பாஸ்கள் தொடங்கி Skilled டெஸ்ட் அடித்து செல்லும் என பல வேலைகள் இருக்கின்றன. இதில் அடிப்படையான பாஸான PCM permit இப்போது அதிக புழக்கத்தில் இருக்கிறது.

பொதுவாக pcm permitஐ Process sector என்றே அழைப்பார்கள். இதற்கும் கம்பெனி கோட்டா கணக்கிடப்படும். pcm பணிகளுக்காகப் நியமிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் தொழிற்சாலை உபகரணங்களின் கட்டுமானம், தடுப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான வேலைகளை மட்டுமே செய்ய முடியும்.

PCMல் வேலைக்கு எடுக்கப்படும் ஊழியர்களின் நாடு, நிபந்தனைகள், விண்ணப்பிக்கும் வயது மற்றும் அதிகபட்ச வேலை காலம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களை மட்டுமே நீங்கள் பணியமர்த்த முடியும். இதில் இந்தியா NTS பிரிவில் இருக்கிறது. basic skillல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் போது அவர்களால் PCMல் 14 வருடங்கள் வேலை செய்ய முடியும். higher skilled ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் போது அவர்கள் 26 வருடம் மட்டுமே வேலை செய்ய முடியும்.

இந்தியாவில் இருந்து ஒருவர் pcm permitல் வேலைக்கு வரும் போது அவர்கள் கீழே குறிப்பிட்டு இருக்கும் 13 வேலைகளில் மட்டுமே பணியமர்த்த படுவார்கள்.

Electrical and Instrumentation works
General fitting
Machine fitting
Metal Scaffolding
Painting and blasting
Plant civil works
Plant equipment fitting
Process pipefitting
Refractory
Rigging and material handling
Rotating equipment fitting
Thermal insulation
Welding

சில ஊழியர்களை PCMல் எடுக்கும் போது அவர்களுக்கு அனுபவம் இருந்தால் டிரைவர் வேலையும் கொடுப்பார்கள். PCM துறையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களும் வேலையைத் தொடங்குவதற்கு முன் பாதுகாப்புப் படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

மேலும் pcmல் வேலைக்கு வந்தவர்கள் சிங்கையிலேயே skilled test முடித்து விட்டு வொர்க் பெர்மிட்டில் வேறு வேலைக்கு மாறிக்கொள்ள முடியும். ஆனால் இந்த பாஸில் நீங்க வேலைக்கு வரும்போது உங்களின் சம்பளம் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் $18 முதல் $20 சிங்கப்பூர் டாலர்கள் தான் இருக்கும். OT கொடுப்பார்கள் அதற்கு நிறுவனங்களுக்கு ஏற்றவாறு 1.5 அல்லது 2 மடங்கு சம்பளம் இருக்கும்.

மேலும் pcm permitல் வந்தவர்களுக்கு கம்பெனி தங்கும் இடத்திற்கு பிடித்தம் செய்யலாம். மேலும் சில பிடித்தங்களும் சம்பளத்தில் இருக்கும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts