டோக்கியோவில் நடைபெற்றும் வரும் ஒலிம்பிக் போட்டியில் வீராங்கனை ஒருவருக்கு அவரது கோட்ச் லவ் ப்ரோபோஸ் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது நம்ம லிஸ்டுல இல்லையே!
அர்ஜெண்டினாவை சேர்ந்த (36) மரியா பெலன் பெரோஸ் மாரிஸ் என்ற வீராங்கனை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு விளையாட்டில் பங்கேற்றார். நேற்று முன்தினம் ஹங்கேரி வீராங்கணை அன்னாவிடம் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்று அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
தோல்வி கண்டது அவரது போட்டியில் தான் ஆனா அதுக்கு அப்புறம் தான் மேஜர் சர்ப்பிரைஸ் அவருக்கு காத்திருந்தது.
தோல்விக்கு பின்னர் ஊடகத்திடம் பேட்டி கொடுத்தார். அப்போது இந்தப்போட்டியில் தோற்றதற்கான காரணக்களை செய்தியாளர்களிடம் கூறி வருத்தத்துடன் பேசினார்.
அப்போது அவருக்கு பின்னால் இருந்த அவரது பயிற்சியாளர் லூகாஸ் ‘வில் யூ மேரி மீ ’ என ஒரு பேப்பரில் எழுதி அவருக்கு பின்னால் இருந்து காட்டினார். அங்கையே லூகாஸ் மண்டியிட்டு தன் காதலை ப்ரோபோஸ் செய்தார். இதை சிறிதும் எதிர்பார்க்காத மரியா பெலன் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து ஓகே சொன்னார்.
2011-ம் ஆண்டு பாரிஸில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது லூகாஸ் இதே போல் ப்ரபோஸ் செய்திருந்தார். ஆனால் அப்போது அவருக்கு மரியா ஓகே சொல்லவில்லை. விடாமல் துரத்தி 11 வருடம் கழித்து மீண்டும் அதே போல் இந்தமுறையும் கோட்ச் காதல் சொல்ல மரியா ஓகே சொல்லிட்டாங்க.
இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லை இவருவரின் காதல் கதைகள் அடுத்தடுத்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இப்ப சொல்லுங்க கியூட் தானா?