TamilSaaga

சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்கள்.. தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் லாரன்ஸ்

சிங்கப்பூரில் தற்போது கடந்த சில நாட்களாக பெருந்தொற்றின் பரவல் என்பது சற்று அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டு ஊழியர்களிடையே தடுப்பூசி போடப்படுகின்ற அந்த விகிதமானது அதிகமாக உள்ளது என்றும் மேலும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் சிங்கப்பூரின் நிதி அமைச்சர் லாரன்ஸ் போன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் கிருமி பரவல் அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பணியிடங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று பரவல் குறையும்பட்சத்தில் விரைவில் அவர்களுக்கான தடைகள் தளர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் இந்த கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என்ற விவரத்தை அவர் குறிப்பிடவில்லை, சிங்கப்பூரில் பல இடங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வருகின்றது. 900க்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் ஜூரோங் துறைமுக குழுமத்தில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

Related posts