TamilSaaga

சக்கர நாற்காலியில் வந்த சிறுவனை… விமானத்தில் ஏற்ற மறுத்த “Indigo”.. பலர் கெஞ்சியும் கடைசி வரை ஒத்துக்கல.. பயணிக்க முடியாமல் பரிதவித்து நின்ற குடும்பத்தின் வீடியோ

உலக அளவில் மனப்பிறழ்வு கொண்ட குழந்தைகளுடைய பெற்றோர்களுக்கு மட்டுமே அவர்களை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும். பொதுவாக குழந்தைகள் என்றாலே குறும்புத்தனம் மிக்கவர்களாக இருக்கின்ற வேளையில் லேசாக மனப்பிறழ்வு கொண்ட குழந்தைகளை கையாள்வது என்பது மிகவும் கடினம்.

ஆனால் அவ்வாறு நடப்பது எந்த விதத்திலும் அந்த குழந்தையின் தவறு அல்ல என்பதை இந்த உலகமே அறியும். இந்த நிலையில் அண்டை நாடான இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் கடும் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது என்றே கூறலாம்.

கடந்த மே மாதம் 7ம் தேதி இந்தியாவில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்வதற்காக ஒரு தம்பதியர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற அந்த தம்பதியினரின் குழந்தைக்கு சற்று மனப்பிறழ்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிறுவனுக்காக பலரும் போராடிய வீடியோ

சிறுவன் விமான நிலையத்திலேயே குறும்புத்தனமாக பல விஷயங்களை செய்ய அவனை அமைதிப்படுத்த அவனுடைய பெற்றோர் மிகவும் முயன்றுள்ளனர். இந்நிலையில் சிறுவனுடைய இந்த செயலைக் கண்ட இண்டிகோ நிறுவன ஊழியர் ஒருவர், சிறுவனை விமானத்தில் ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணிக்கும் பிற பயணிகளுக்கு இவனால் இடையூறு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

சாங்கி விமான நிலையம் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகள் கவனத்திற்கு – டாக்ஸி தட்டுப்பாட்டை குறைக்க அதிகரிக்கப்படும் கட்டணம்

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தையால் யாருக்கும் எந்த விதமான இடையூறும் இல்லாமல் பயணிப்பார் என்று எவ்வளவோ எடுத்துரைத்தும், அவர் அந்த சிறுவனை விமானத்தில் ஏற்ற மறுத்துள்ளார்.

அந்த சிறுவனுக்கு அவன் குடும்பத்திற்கு ஆதரவாகவும் அங்கு குழுமியிருந்த பயணிகள் பலரும் பேசியபோதும் அந்த இண்டிகோ நிறுவன ஊழியர் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. தங்களுடைய விமான நிறுவன விதிகளின்படி அந்த சிறுவனை விமானத்தில் ஏற அனுமதிக்கமுடியாது என்று கூறியுள்ளார். இறுதியில் அவர்கள் மூவரையும் ராஞ்சி விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு அந்த விமானம் புறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தமிழக ஊழியர் “சிவசாமி மரணம்..” அஜாக்கிரதையாக செயல்பட்ட சக ஊழியருக்கு சிறை – உயிரின் மதிப்பு அறிந்து செயல்படுங்கள்

ஏக்கத்தோடு அந்த தகப்பனும், தாயும் சக்கர நாற்காலியில் தங்கள் மகனோடு விமான நிலையத்தில் நின்ற காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரல் ஆகியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்கள் இந்த சம்பவம் குறித்து தனிப்பட்ட முரையில் தானே விசாரிப்பதாகவும். அந்த ஊழியரின் செயல் ஏற்புடையது அல்ல என்றும் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts