TamilSaaga

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவருக்கு தனிமைப்படுத்துதலில் விளக்கு? – சிங்கப்பூர் அமைச்சர்

சிங்கப்பூர் அரசு செப்டம்பர் மாதம் முதல் பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை தனிமைப்படுத்துதல் இன்றி சிங்கப்பூருக்குள் அனுமதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகளும் ஆகஸ்ட் 18 க்கு முன்னர் தளர்த்தப்படலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் கூற்றுப்படி மக்கள் தொகையில் 80 சதவீதம் பேருக்கு அந்த நேரத்தில் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று கூறுகின்றது.

இருப்பினும், அமைச்சர்களின் அறிக்கையின்படி செப்டம்பர் முதல் நாடு, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் திறந்திருக்கும் என்றாலும், பெருந்தொற்று குறைவாக உள்ள நாடுகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் தீவு முழுமைக்கும் தற்போது நடப்பில் உள்ள தளர்வுகள் மேலும் தளர்த்தப்படலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு அரசு மானியங்களை வழங்கியுள்ளது நினைவுகூரத்தக்கது.

Related posts