TamilSaaga

உலகில் முதன்முறையாக புதிய திட்டத்தினை கையில் எடுக்கும் சிங்கப்பூர்… சிங்கப்பூர் மக்கள் 2050 வரை கவலை இல்லாமல் வாழலாம்!

மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு உலகிலேயே முதன்முறையாக அம்மோனியா மூலம் மின்சார உற்பத்தியை தயாரிக்கும் முயற்சியை சிங்கப்பூர் அரசு மேற்கொள்ள இருக்கின்றது. இதன் மூலம் 2050 ஆம் ஆண்டிற்கு தேவையான எரிசக்தியை 50% மேல் பெற முடியும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் இதன்மூலம் மின் உற்பத்தி மட்டுமல்லாமல் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள்களை தயாரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. நம்மை சுற்றியுள்ள காற்றில் கலந்துள்ள நைட்ரஜன் உடன் ஹைட்ரஜன் சேரும்பொழுது அமோனியா வாயு நமக்கு கிடைக்கின்றது. இதன் மூலம் எரிபொருள் தயாரிக்கும் பொழுது பூமியின் வெப்பத்தை அதிகரிக்கும் கரிம பொருள் வெளியேறாது என்பதால் இத்திட்டத்தினை கையில் எடுத்துள்ளது.

அம்மோனியா தயாரிக்கப்படும் ஆலை ஜுராங் தீவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் அமோனியா வாயுவினை உருவாக்கும் திட்டத்தில் ஆறு நிறுவனங்கள் இணைவதற்கு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 0.1 மில்லியன் டன் அம்மோனியாவை சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.எனவே வருங்காலங்களில் சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருக்காது என நம்பப்படுகின்றது

Related posts