TamilSaaga

சிங்கப்பூரின் குறிப்பிட்ட துறைகளில் ஏற்பட்டிருக்கும் தொழிலாளர் தட்டுப்பாடு…நிறுவனம் வெளியிட்ட தகவல்!

சிங்கப்பூரை பொறுத்தவரை வேலை வாய்ப்புகளின் விகிதமானது கொரோனாவிற்கு பின்பு அனைத்து துறைகளிலும் பழைய நிலையை எட்டிய நிலையில் சுகாதாரத்துறை பொருத்தமட்டில் ஊழியர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சொல்லப் போனால் சுகாதார துறையின் குறிப்பிட்ட வேலைகளில் சேர்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அதிலும் ரேடியோகிராஃபர், ஃபார்மசி போன்ற துறைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பிறகு நர்ஸ் மற்றும் சுகாதார துறையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை தட்டுப்பாடை எட்டிய நிலையில் மேலும் சில தொழில்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மக்கள் தொகை முப்படைதல் மற்றும் சுகாதார கட்டமைப்பை விரிவு படுத்துதல் போன்றவற்றின் காரணமாக பற்றாக்குறை நிலவுவதாக தெரியவந்துள்ளது. எனவே கீழ்கண்ட பணிகளான நர்ஸ், சோனாகிராபர், ரேடியோகிராபர் போன்ற பணிகளுக்கு அதிக அளவு ஆட்கள் தேவைப்படுவதாக சிங்கப்பூரின் IHH Heath care நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts