சிங்கப்பூரில் வீட்டை விட்டு ஓடிப்போன 16 வயது சிறுமியை ஒரு பெண் அழைத்துச் சென்று, பணத்திற்காக ஆன்லைன் மூலம் பாலியல் சேவைக்கு அந்த பெண்ணை பயன்படுத்தியுள்ளார். மற்றும் சட்டவிரோத செயல்களுக்காக அந்த சிறுமியை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு போலீஸ் தன்மீது நடவடிக்கை எடுக்க இருப்பதை கண்டறிந்ததும், அந்த பெண் குற்றவாளி தனது வீட்டின் கீழ் வசிக்கும் மற்றொரு பெண்ணிடம் இந்த குற்றம் சம்மந்தமான அனைத்து ஆதாரங்களையும் அழிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் நீதிமன்ற ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்படாத அந்த 34 வயதான சிங்கப்பூரருக்கு நேற்று திங்கள்கிழமை (ஜனவரி 10) மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரு மைனரின் பாலியல் சேவைகளைப் பெற பல ஆண்களுக்கு உதவி செய்தல், ஆதாரங்களை அழிக்க ஒரு நபரைத் தூண்டியது மற்றும் முகமூடி அணியத் தவறியது உட்பட அவர் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 6 குற்றச்சாட்டுகள் அவருடைய தண்டனையின்போது கருத்தில்கொள்ளப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 2018ல் குற்றவாளி தனது வளர்ப்பு மகள் மூலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அறிந்து கொண்டதாக நீதிமன்றம் விசாரித்தது. அப்போது தனது 16 வயதில் இருந்த அந்த மைனர் சிறுமி, தனது வீட்டை விட்டு வெளியேறி தற்போது தண்டனை பெற்ற அந்த குற்றவாளி மற்றும் பிற பெண்களுடன் சாய் சீயில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கத் தொடங்கியுள்ளார். அந்த பிளாட்டில் வசிப்பவர்கள் குற்றவாளியை “அம்மா” என்றே அழைத்துள்ளனர். ஏனென்றால் அவர்தான் அவர்களை பராமரித்து உணவு மற்றும் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். குற்றவாளி ஒரு பாலியல் தொழிலாளி மற்றும் அவரது சேவைகளை விளம்பரப்படுத்தவும் வாடிக்கையாளர்களைத் தேடவும் லோகாண்டோவில் அவரது கணக்கைப் பயன்படுத்தினார். மைனருடன் நட்பாகப் பழகிய சில மாதங்களிலேயே, அந்தப் பெண் சிறுமியின் பாலியல் சேவைகளை ஆன்லைனில் விளம்பரப்படுத்தத் தொடங்கினார்.
டிசம்பர் 2018 மற்றும் ஏப்ரல் 2019-க்கு இடையில், அவர் அந்த சிறுமியின் பாலியல் சேவைகளுக்கான விளம்பரங்களை வெளியிட்டுள்ளார். சிறுமியின் புகைப்படத்தை வைத்து, அந்த சிறுமிக்கு 16 வயதுதான் என்று தெரிந்தும் அவருக்கு 21 வயது என்று பொய் கூறியுள்ளார். அந்த மைனர் 30 நிமிடங்களுக்கு S$100, ஒரு மணிநேரத்திற்கு S$200 மற்றும் உடலுறவு உள்ளிட்ட இரண்டு மணிநேர பாலியல் சேவைகளுக்கு S$500 வசூலித்துள்ளார். அதேபோல சில சமயங்களில் பாலியல் சேவைகள் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக அந்த குற்றவாளி சிறுமியை தாக்கியுள்ளார்.
சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிளில் பெண் தோழியுடன் சென்ற நபர் – “அனுபவமின்மையால்” ஏற்பட்ட சோகம்
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று கூறுவதை போல, அந்த பெண்ணின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் மீது உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டு தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.