TamilSaaga

சிங்கப்பூர் Hougang பகுதி.. “மர்ம குண்டுகளால்” தாக்கப்பட்ட வீடுகள் – பலே வேலை பார்த்தவரை பதமாக தூக்கி சிறையில் போட்ட சிங்கை போலீஸ்!

சிங்கப்பூரில் Hougang பகுதியில் உள்ள சில வீடுகள் மர்மமான முறையில் ஒருவித உலோக குண்டுகளால் தாக்கப்பட்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் Sling Shot என்று அழைக்கப்படும் கவண்கல் பயிற்சியில் இருந்த 61 வயது நபர் தான் இதற்கு காரணம் என்று தற்போது கண்டறியப்பட்டு அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல் 13ம் தேதி அந்த நபருக்கு மூன்று வார சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக சான் ஃபேன் கியோவ் என்ற அந்த நபர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி அவர் மீள் சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த 2019ம் ஆண்டு ஈ-காமர்ஸ் தளமான Taobaoல் மலிவான விலையில் இந்த Sling Shotகள் கிடைப்பதை பார்த்த பிறகு, அவர் அவற்றை உபயோகிப்பதை ஒரு வழக்கமாக மாற்றியுள்ளார். அந்த ஆண்டே அவர் சீனாவிற்கு சென்றிருந்தபோது அங்கு Sling Shot போட்டிகளை பார்த்து சில காலம் பயிற்சியும் பெற்றுள்ளார்.

“இனி Health Declaration தேவையில்லை”.. சிங்கப்பூர் வருபவர்களுக்கு மேலும் ஒரு தளர்வு.. ICAவின் தீடீர் அறிவிப்பு – இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு இது பொருந்துமா?

இந்த ஆர்வம் அதிகரிக்க, கடந்த நவம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020க்கு இடையில் Taobaoவிலிருந்து ஏழு Sling Shot மற்றும் உலோக பந்துகளை வாங்கியுள்ளார். அதன் பிறகு டிசம்பர் 25, 2019 அன்று தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஹூகாங்கில் உள்ள பிளாக் 933ல் உள்ள பல மாடி கார்பார்க்கின் பகுதியில் பயிற்ச்சி மேற்கொண்டுள்ளார்.

ஆனால் சான் தனது இலக்குகளைத் தவறவிட அது அருகில் இருந்த வீடுகளில் குறைந்தது இரண்டு ஜன்னல்களை உடைத்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சான் தனது தவறுக்கு வருந்தி அந்த குடியிருப்பாளர்களுக்கு $310 அளவிற்கு பணத்தை கொடுத்ததும் உறுதியாகியுள்ளது.

சிங்கப்பூர் சூன் லீ சாலை.. எழுத்துப்பிழையோடு வைக்கப்பட்ட பதாதைகளை – “தமிழக புலம்பெயர் தொழிலாளிகளிடம்” பகிரங்க மன்னிப்பு கேட்ட MWC

சான்னின் வழக்கறிஞர் வாதிடும்போது, தனது கட்சிக்காரரின் நடவடிக்கையால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று வாதிட. மாவட்ட நீதிபதி மார்வின் பே, தடைசெய்யப்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்களை சான் பொருட்படுத்தாமல் இருந்தது நிரூபணமாகியுள்ளது என்றும் ஆகையால் அவருக்கு 3 வார சிறை தண்டனை விதிப்பதாகவும் கூறினார்.

சிங்கப்பூர் yishun பகுதியிலும் இதேபோல உலோக குண்டுகளால் தாக்கப்படும் ஜன்னல்கள் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts