TamilSaaga

“பணியிடத்தில் உயிரிழந்த வெளிநாட்டு தொழிலாளி” : கைக்குழந்தையுடன் கண்கலங்கி நின்ற மனைவி – உதவிய நல்ல உள்ளங்கள்

குடும்பத்தை காக்க உழைக்க செல்லும் பலரின் வாழ்கை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது இந்த கொரோனா என்றால் அது சற்றுமிகையல்ல. துன்பங்கள் பல அனுபவித்து வீடு வாசலை விற்று வெளிநாட்டிற்கு சென்றாவது சம்பாரித்து குடும்ப நிலைமையை உயர்ந்துவிடலாம் என்று தான் பல கனவுகளோடு தாய் மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு பயணம் செல்கின்றனர் பலர். ஆனால் அப்படிகூட போகவிடாமல் மக்களை துன்புறுத்தி வருகின்றது இந்த பெருந்தொற்று.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் புக்கிட் பாடோக் பகுதியில் தீ” – விரைவாக செயல்பட்ட நபரை பாராட்டிய சிங்கப்பூர் SCDF

இந்நிலையில் ஏற்கனவே வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த ஒரு தமிழரின் வாழ்கை இவ்வளவு ஒரு சோகமான முடிவுக்கு செல்லும் என்று நிச்சயம் அவர் நினைத்திருக்க மாட்டார் தமிழகத்தில் உள்ள பெரம்பூலுர் என்ற ஊரை சேர்ந்தவர் தான் ராஜீவ்குமார் (வயது 39). துபாயில் வேலை செய்துவந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நெஞ்சு வழி ஏற்பட்டு அவர் தனது அறையிலேயே இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்த அவருடைய உடலை மீட்கமுடியாமல் அவரது மனைவி பாக்கியசீலி தனது இரண்டு வயது கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அல்லாடியுள்ளார்.

பாக்கியசீலி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் உதவியையும் நாடியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் துயர நிலையை அறிந்த திமுக அயலக அணியின் இணை அமைப்பாளர் யாழினி உடனடியாக துபாயில் உள்ள அமீரக திமுகவின் அமைப்பாளரை அணுகி விஷயத்தை கூற, சற்றும் தாமதிக்காமல் களமிறங்கி அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறி இறந்த தொழிலாளி ராஜீவ்குமாரின் உடலை தாயகம் கொண்டுசெல்ல ஆவணம் செய்துள்ளார். இதற்கென்று தனி குழுவை அமைத்து பெரம்பலூரில் உள்ள குடும்பத்தாரிடம் இருந்து தேவையான சட்டபூர்வமான ஆவணங்களை பெற்று ராஜீவ்குமார் வேலைபார்த்த கம்பெனியில் இருந்தும் தேவையான ஆவணங்களை பெற்று உடலை தாயகம் கொண்டு செல்ல பணிகளை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள் : பழ லாரினு நினைத்து சோதனை செய்த சிங்கப்பூர் ICA அதிகாரிகள் : ஆனா சிக்கியது வேற பொருள்

இந்நிலையில் கடந்த வாரம் அவருடைய உடல் சரியான ஆவணங்கள் பூர்த்திசெய்யப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. கனவுகளோடு செல்லும் பலரின் வாழ்கை இதுபோன்ற துயரத்தில் முடிவது அனைவரின் நெஞ்சை உழுகுவதாக உள்ளது.

Image and Content Source : UAETAMILWEB

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts