TamilSaaga

“விரைவில் “அந்த” அண்டை நாட்டுடன் தொடங்கும் சிங்கப்பூர் VTL சேவை” : தயார் நிலையில் 6 விமான சேவை நிறுவனங்கள்

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை (VTL) விமான சேவைகளை வழங்க ஆறு விமான நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 18) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் ஏசியா, ஜெட்ஸ்டார் ஆசியா, மலேசியா ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர், ஸ்கூட் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) ஆகியவை ஏர்லைன்ஸ் இதில் அடங்கும்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது “வரம்”

சாங்கி விமான நிலையம் மற்றும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) இடையேயான VTL, நவம்பர் 29 அன்று தொடங்கப்படும் என்று இந்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சாங்கி விமான நிலையம் மற்றும் KLIA இடையே தினசரி ஆறு நியமிக்கப்பட்ட VTL சேவைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான தடுப்பூசி போடப்பட்ட பயண அனுமதிச் சீட்டுக்கான விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 22ம் தேதி காலை 10 மணிக்கு திறக்கப்படும்.

“சிங்கப்பூரும் மலேசியாவும் வலுவான பொருளாதார தொடர்புகளையும், மக்களுக்கு இடையேயான அன்பான உறவுகளையும் அனுபவிக்கின்றன” என்று CAAS தனது ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது. “இரண்டு நெருங்கிய அண்டை நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைகளை மீண்டும் திறப்பதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் மற்றும் பல குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும் கூட்டு VTL ஒரு முக்கியமான படியாகும்” என்றும் அது கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

தொற்றுநோய்க்கு முன்னர், சாங்கி விமான நிலையத்தில் வருடாந்திர பயணிகள் வருகைக்கான முதல் மூன்று சந்தைகளில் மலேசியா இருந்தது என்று CAAS தெரிவித்துள்ளது. சிங்கப்பூர்-கோலாலம்பூர் இணைப்பு உலகின் பரபரப்பான சர்வதேச விமானப் பாதையாகும், தினசரி சுமார் 40 விமானங்கள் மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 7,000 வருகைகள் உள்ளன என்று CAAS தெரிவித்துள்ளது.

Related posts