TamilSaaga

சிங்கப்பூரில் தமிழக ஊழியர் “சிவசாமி மரணம்..” அஜாக்கிரதையாக செயல்பட்ட சக ஊழியருக்கு சிறை – உயிரின் மதிப்பு அறிந்து செயல்படுங்கள்

சிங்கப்பூரில் 34 வயதான கனரக வாகன ஓட்டுநர் ஒருவருக்கு நேற்று புதன்கிழமை (மே 11) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பணியின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறியதால், அவரது சக ஊழியர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஹம்மது சுல்கர்னைன் பின் பாய்மென், என்ற அந்த நபரின் அலட்சியத்திற்காக 20 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 22, 2018 அன்று, டிரெய்லரில் உள்ள ISO டேங்க் கண்டெய்னரைச் சேகரிப்பதற்காக சுல்கர்னைன் பிரைம் மூவரை ஓட்டிச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது.

கலெக்ட் செய்யும் தனது பணி முடிந்தபிறகு பின்னோக்கி அவர் தனது கனரக வாகனத்தை செலுத்தும்போது பின்னல் நின்றுகொண்டு தனது பணியை செய்துகொண்டிருந்த தமிழக ஊழியர் சிவசாமி நேதாஜி மீது அந்த வாகனம் ஏறியது.

தனது வாகனத்தை பின்னோக்கி எடுக்கும்போது, அங்கு யாரெனு இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்யமல் முகமது செய்த செயலால் இந்த கோர விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இரு கண்டைனர்களுக்கு இடையில் சிவசாமி சிக்கிக்கொள்ள சில மணிநேரம் கழித்து அவர் மீட்கப்பட்டார்.

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 100 வெள்ளி மதிப்பிலான CDC வவுச்சர்கள்.. நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவிப்பு.. எப்படி பெறுவது? – லிங்க் உள்ளே

உடனைடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிர் பிறந்தது, இணைப்புச் செயல்முறை மற்றும் பிரைம் மூவரின் செயல்பாட்டின் போது பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க சுல்கர்னைன் தவறிவிட்டதாக அதன் விசாரணைகளில் கண்டறிந்துள்ளதாக MOM தெரிவித்துள்ளது.

பீ ஜூ இண்டஸ்ட்ரீஸ், என்ற அந்த நிறுவனம் தான் குறிப்பிட்ட அந்த நாளில் அந்த இடத்தில் பணியாளர்களை கொண்டு வேலை செய்துவந்த நிறுவனம். அந்த நிறுவனம் மீதும் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மேலும் இரு பணியிட மரணங்கள்.. ஒரு இந்திய தொழிலாளி உள்பட இருவர் பலி – 12 நாட்கள் உயிருக்கு போராடிய நிலையில் ஏற்பட்ட சோகம்

MOMன் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வாளர் செபாஸ்டியன் டான் கூறுகையில், “இந்தச் சம்பவம் பிரைம் மூவர் போன்ற கனரக வாகனங்களின் பாதுகாப்பற்ற இயக்கம் உயிர் இழப்புக்கு வழிவகுக்கும் என்பதற்கு ஒரு சோகமான உதாரணம் என்றார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts