TamilSaaga

மோசமான குடியிருப்பு நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர் இருக்கின்றாரா? நீங்கள் செய்யவேண்டியது என்ன?

சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் 230க்கும் மேற்பட்ட மொபைல் குழுக்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்குமிடங்களை ஆய்வு செய்வதற்கும், குடியேறிய குடியிருப்பாளர்களுக்கு சரியான தங்குமிடம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கும் நாடுமுழுவதும் பயன்படுத்தப்படுகின்றன என்று MOM வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் மோசமான வீட்டு நிலைமைகளில் வாழும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் உடனடியாக 6317 1111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்குறிப்பிட்ட அந்த எண்களுக்கு வாரநாட்களில் மட்டுமே அழைக்கவேண்டும் என்றும் மேலும் இந்த நிலை குறித்து புகார் அளிக்க இந்த இணையதளத்தை அணுகலாம் என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தொற்று நிலை அதிகரித்து வரும் அதே நேரத்தில் ப்ளூ ஸ்டார் விடுதி, உட்லண்ட்ஸ் விடுதி போன்ற இடங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 15 மாதங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் டார்மிட்டரியில் அடைபட்டிருப்பது அவர்களுக்கு மனரீதியாக பெரும் கஷ்டத்தை அளித்து வருகின்றது.

MOM வெளியிட்ட அறிக்கை

இந்நிலையில் சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் 15 தொடங்கப்பட்ட பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரமும் 500 தொழிலாளர்கள் லிட்டில் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதால், வெளியே செல்லக்கூடிய தகுதியான தொழிலாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு தங்குமிடம் ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டது. மனிதவள அமைச்சகம் (MOM) இந்த திட்டத்தில் எந்த விடுதிகளைச் சேர்க்க தகுதியுடையது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப பட்டியலிடப்படும் என்று புலம்பெயர்ந்த தொழிலாளர் விடுதிகளை மேற்பார்வையிடும் MOMன் அஷ்யூரன்ஸ், கேர் மற்றும் ஈங்கேஜ்மென்ட் குழுமத்தின் தலைவர் திரு டங் யுய் ஃபாய் கூறினார்.

லிட்டில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முதல் சமூக வருகைக்கு முன்னதாக ஒரு நேர்காணலில், திரு. துங் பைலட் திட்டம் எவ்வாறு செயல்படும், ஏன் இப்போது மட்டும் நடக்கிறது, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமே சமூக வருகைக்கு தகுதியுடையவர்கள் என்று MOM கூறியது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறு மணி நேரம் வரை லிட்டில் இந்தியாவுக்குச் செல்லலாம்.

Related posts