TamilSaaga

“சிங்கப்பூரில் சட்டவிரோத தொழிலாளர் இறக்குமதி” : 12 மணிநேரத்தில் MOM நடத்திய அதிரடி Operation

சிங்கபரில் கடந்த 14 செப்டம்பர் 2021 அன்று, MOMன் வெளிநாட்டு மனிதவள மேலாண்மை பிரிவு (FMMD) பொய்யான அறிக்கைகள் மூலம் பெறப்பட்ட வேலை பாஸ்களின் மூலம் வெளிநாட்டவர்களை சிங்கப்பூருக்குள் அழைத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு மோசடி கும்பலுக்கு எதிராக 12 மணி நேர நடவடிக்கையில் 18 பேரை கைது செய்தது.

செல்லுபடியாகாத வேலை பாஸ் இல்லாமல் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களிலிருந்து CPF பங்களிப்புகளைப் பெறும் நபர்கள் போன்ற சந்தேகத்திற்கிடமான வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் பற்றி அறிந்தால் பொதுமக்கள் அந்த விஷயத்தை குறித்து உடனடியாக MOMக்கு 64385122 அல்லது mom_fmmd@mom.gov.sgக்கு தெரிவிக்க வேண்டும். கண்டிப்பாக நீங்கள் அளித்த அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

MOM நடத்திய அதிரடி கைது நடவடிக்கையின் வீடியோ

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தொழிலாளர்களை இறக்குமதி செய்ததாக சந்தேகிக்கப்படும் 18 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. MOM வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த செப்டம்பர் 14) அன்று 12 மணி நேர அமலாக்க நடவடிக்கையை செய்ததாக கூறியது. இந்த அமலாக்க நடவடிக்கையில் தவறான அறிக்கைகள் மூலம் பெறப்பட்ட வேலை பாஸ்களில் வெளிநாட்டவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வருவதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோசடி கும்பல் சிக்கியது.

தீவு முழுவதும் சுமார் 22 இடங்களில் இந்த அமலாக்க நடவடிக்கை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு வெளிநாட்டவர் சட்டவிரோதமாக வேலை பாஸ் பெற முயன்ற தகவல் கிடைத்தவுடன் ஜூலை மாதத்தில் தனது விசாரணையை தொடங்கியதாக MOM கூறினார். சில மாதங்களில் விரிவான பகுப்பாய்வுகளின் மூலம், முறையான வணிக செயல்பாடுகள் இல்லாவிட்டாலும், வேலை பாஸுக்கு விண்ணப்பிக்க பல ஷெல் நிறுவனங்களை அமைத்ததாக சந்தேகிக்கப்படும் மோசடி குழுவை அமைச்சகம் கண்டுபிடித்தது.

Related posts