TamilSaaga

சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு வழிவகுக்கும் குற்றங்கள் என்னென்ன?.. இதுவரை சிங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

நமது சிங்கப்பூருக்கு Fineகளின் நகரம் என்ற ஒரு பெயரும் உண்டு, காரணம் இங்கு விதிமீறல்கள் மிகவும் கடுமையான குற்றங்களாக பார்க்கப்படுகின்றது. இன்றளவும் மரண தண்டனையை மனித உரிமை மீறலாக பார்க்கப்படும் பல நாடுகளுக்கு மத்தியில் கொடூரமான குற்றங்களைப் புரியும் பலருக்கு சிங்கப்பூர் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு துவங்கி இதுவரை சிங்கப்பூரில் 400க்கும் அதிகமான குற்றவாளிகள் சிங்கப்பூர் அரசால் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்தியா, மலேஷியா, ஹாங் காங், இந்தோனேஷியா, UK, இலங்கை, லண்டன் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 157 பேர் சிங்கப்பூர் அரசால் இங்கு தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கு அண்மையில் மரணதண்டனையை சிங்கப்பூர் அரசு உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் எதற்கெல்லாம் மரணதண்டனை விதிக்கப்படலாம்?

கொலை குற்றவாளிகள்
ஆட்கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள்
தற்கொலைக்கு பிறரை தூண்டும் விதமாக நடந்துகொள்ளும் குற்றவாளிகள்
ஆயுதம் கடத்துதல்
மற்றும் போதைப்பொருள் கடத்துதல்

உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அவர்களின் குற்றங்களின் அளவுக்கு ஏற்ப மரண தண்டனை வரை வழங்கப்படும்.

கிட்டத்தட்ட 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட நமது சிங்கப்பூர் ஒரு நகர-மாநில அரசு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிக அளவில் மரண தண்டனை வழங்கு நாடுகளில் சிங்கப்பூரும் இன்று. இதில் கணிசமான அளவில் வெளிநாட்டு பிரஜைகள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்ற கோட்பாடுதான் செயல்பாடு நாடுகளில் நமது சிங்கப்பூரும் ஒன்று. கொலைக்குற்றம் மட்டுமல்ல பொதுவெளியில் எச்சில் துப்புதல் தொடங்கி இங்கு செய்யப்படும் அனைத்து குற்றங்களுக்கும் தண்டனைகள் கடுமையாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts