TamilSaaga

திராவிட குடும்பத்தில் ஒரு தெய்வீக ராகம்.. துர்கா ஸ்டாலின் கோவில் விசிட்டுகள் ஒரு பார்வை!

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் முதல் முறையாக பொறுப்பேற்றுள்ள இந்த பயணத்தில் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலினின் துணையும் ஊக்கமும் வேண்டுதலும் இன்றியமையாதது.

திராவிட குடும்பத்தில் மருமகளாக இருந்தும் அவரின் பக்தி பலமுறையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கணவருக்காக, மகனுக்காக குடும்பத்திற்காக உலகில் இருக்கும் எல்லா கோவில்களுக்கும் சென்று வருவது பக்தியோடு பூஜைகள் செய்வது என துர்கா ஸ்டாலின் ஆழமான கடவுள் பக்தி கொண்டவராக இருக்கிறார். எப்படி இவரால் இத்தனை ஆண்டுகள் எவ்வித பிரச்சனையும் இனி இதை கையாள முயன்றது என்பது மிகப் பெரிய ஆச்சரியம் தான். திராவிட குடும்பம் பெண் சுதந்திரத்தில் பெரும் துணையாக நிற்கும் அதன் பிரதிபலிப்பு தான் இதுவும்.

கடந்த மே 7-ஆம் தேதி ஸ்டாலின் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லும்போது அவர் கண்கள் கலங்கியது இல்லையோ அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உணர்ச்சிப் பெருக்கால் கலங்கி வெடித்து அழுதார். அந்த தருணத்தை தொண்டர்களால் மறக்கவே முடியாது.

ஸ்டாலின் துவண்டு போகும் போது தோள் கொடுத்ததுடன் , அவர் வெற்றி பெற வேண்டும் என கோவில் கோவிலாக சென்று வழிபாடு நடத்தியவர் துர்கா ஸ்டாலின்.வீட்டிலேயே கோவில் போல் பூஜை அறையையும் வைத்துள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது.

துர்கா ஸ்டாலின் பூஜை அறையில் சிவன், பெருமாள் ,துர்க்கை ,விநாயகர், சீரடி சாய்பாபா, அனுமன் உள்ளிட்ட புகைப் படங்களுடன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாய் அஞ்சுகம் அம்மாள், தந்தை முத்துவேலர், துர்கா ஸ்டாலின் தாய் ,தந்தை மற்றும் கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தனர்.

துர்கா ஸ்டாலின் காலையில் எழுந்து விளக்கை ஏற்றிவிட்டு தான் சாப்பிடுவதற்கே செல்வாராம்.பூஜையறையில் முடிந்த அளவு நேரத்தை செலவழிக்கும் இவர் இறைவனை துதிக்க பாடப்படும் பல்வேறு பாடல்கள் கொண்ட புத்தகங்களை வைத்துள்ளார்.

இதுவரை 8 முரை திருப்பதி ஏழுமலையான் கோவில்லுக்கு நடந்தே சென்றுள்ளார். திருத்தணி, திருவண்ணாமலை, ஷீரடி என எல்லா கோவில்களுக்கும் சென்று விசேஷ பிராத்தனைகள் செய்துள்ளார். சமீபத்தில் அர்ஜூன் கட்டி முடித்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று பூஜையில் கலந்து கொண்டார். திராவிட குடும்பத்தில் இவரின் தெய்வீக ராகம் தொடர்கிறது.

Related posts