TamilSaaga

மூன்று மாத தனிமைப்படுத்துதல்.. 7 நாள் கடல் பயணம் : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த பாலாஜி மற்றும் அதில்

சிங்கப்பூர் உயிரியல் பூங்காவின் ஒட்டகச்சிவிங்கி கூட்டத்தில் இரண்டு புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து ஒன்பது நாள் தரை மற்றும் கடல் பயணம் மற்றும் மூன்று மாத தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 30) தேதி மக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அடில் மற்றும் பாலாஜி என்ற பெயர்கொண்ட இரண்டு ஆண் ரோத்ஸ்சைல்ட் ஒட்டகச்சிவிங்கிகள் இந்தியாவின் மைசூரு மிருகக்காட்சிசாலையில் இருந்து 22 மணிநேர சாலைப் பயணம் மற்றும் 7 நாள் கடல் பயணத்திற்கு பிறகு பிறகு மே 26 அன்று சிங்கப்பூரை வந்தடைந்தன.

“கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்களின் பராமரிப்பில் மூன்று மாத தனிமைப்படுத்துதலில் இந்த விலங்குகள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டகச்சிவிங்கிகள் தங்கள் புதிய வாழ்விடங்களில் நன்கு பழகிவிட்டது என்று கூறப்படுகிறது. தினசரி வைக்கோல், தாவரவகை துகள்கள் மற்றும் பழங்கள், பலா மற்றும் இலைகளின் விருந்து அவைகளுக்கு வழங்கப்படுகின்றன என்று ”சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம்” (WRS) வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கென்யா மற்றும் உகாண்டாவை பூர்வீகமாகக் கொண்ட ரோத்ஸ்சைல்ட் வகை ஒட்டகச்சிவிங்கிகள் இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. காடுகளில் வெறும் 2,000க்கும் குறைவான இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. WRS மற்றும் மைசூரு மிருகக்காட்சிசாலை இடையேயான கூட்டாண்மையானது கடந்த 2010ல் நிறுவப்பட்டது. மேலும் 2018ம் ஆண்டு முதல் விலங்குகள் பரிபாற்றம் நடந்து வருகின்றது.

தொற்றுநோய்க்கு மத்தியில் சரக்கு விமானங்கள் இல்லாததால் ஒட்டகச்சிவிங்கிகளின் பரிமாற்றம் சிக்கலானது என்று WRS கூறியது. “வேகமாக வளர்ந்து வரும் இளைஞர்கள் அனைத்து விதமான போக்குவரத்தையும் தாண்டி செல்வதற்கு முன்பு வரையறுக்கப்பட்ட சாளர காலம் இருந்ததால், குழு மேற்பரப்பு போக்குவரத்தின் விருப்பத்தை ஆராய்ந்தது என்றும் WRS தெரிவித்தது.

Related posts