TamilSaaga

சிங்கப்பூரில் எந்த துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கபோகிறது? நிபுணர்களின் கணிப்பும் எதிர்ப்பார்ப்பும்!

 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் வளர்ந்த நாடாக கருதப்படுவது சிங்கப்பூர். எல்லா துறைகளிலும் கால் பதித்து வளர்ச்சியை எட்டிப் பிடித்து இருக்கும் நாடுகளில் ஒன்று தான் இந்த சிங்கப்பூர். இது போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் குடியேற மற்றும் வேலை செய்ய உலகில் உள்ள பல்வேறு நாட்டு மக்களும் விரும்புகின்றனர்.ஏனென்றால் இது போன்ற வளர்ந்த நாடுகளில் பணி புரிவதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கை தரம் உயரும்.அந்த வரிசையில் சிங்கப்பூரை தேடி ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் வேலை காரணமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் என்னென்ன பணியில் அமர்வது, யார் யார் தகுதியானவர்கள் என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் MOM அமைப்பின் கீழ் உள்ளடங்கும்.இவர்களே நாட்டில் என்னென்ன வேலை வாய்ப்புகள் இருக்கிறது,என்னென்ன வேலை வாய்ப்புகள் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது,எவ்வளவு வருமான உயர்வு இருக்கும் என்பது போன்ற கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.அந்த வகையில் MOM அமைப்பு தற்போது சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறது.
பல்வேறு துறைகளில் புதுப்புது வேலை வாய்ப்புகள் வர இருக்கிறது.எனவே இந்த 2024 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும்.இந்த பதிவில் என்னென்ன துறைகளில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாகும்,குறைந்தபட்ச வருமானம் எவ்வளவு இருக்கும் என்பது போன்ற விஷயங்களை பார்க்கலாம்.

சிங்கப்பூர் அரசின் MOM அமைப்பு கடந்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. இதில் வருங்காலத்தில் என்னென்ன மாதிரி வேலை வாய்ப்புகள் உருவாகும்.எந்த துறைகளில் வேலை செய்பவர்களை நிறுவனத்தினர் தேடுவர் என்பதை இந்த அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறது.கடந்த கொரோனா காலகட்டங்களில் ஏற்பட்ட ஒரு சிறிய மந்த நிலை இப்போது முழுமையாக நீங்கி வேலை வாய்ப்புக்கான அறிகுறிகளை பிரகாசமாக காட்டுகிறது.MOM அமைப்பை பொருத்தவரை கடந்த ஆண்டு சுமார் 16,800 நிறுவனங்கள் வெளியிட்ட வேலைகளுக்கு 21 லட்சத்து 68 ஆயிரத்து 900 பணியாளர்களை விண்ணப்பித்திருக்கிறார்கள்.இதுவும் சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் நடைபெற்றது.
பொதுவாக சிங்கப்பூரில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறிய மந்தநிலையை தவிர மற்ற காலகட்டங்களில் வேலை வாய்ப்புகளில் நல்ல ஏற்றங்களை பார்க்கலாம்.அதே போல் இந்த ஆண்டு வேலை வாய்ப்புகள் அதிகரிக்க இருக்கிறது. புதிதாக உருவாக்கி இருக்கும் வேலை வாய்ப்புகள் கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் 47 சதவீதத்தை தொட்டது.இதன் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நிறைய பயன் அடைந்தார்கள்.
தற்போது வேலை வாய்ப்புகள் உயர்ந்திருக்கிறது என்பதை பார்த்தோம்.இப்பொழுது குறிப்பாக எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதையும் விரிவாக பார்க்கலாம். இந்த பதிவின் மூலம் அனுபவம் வாய்ந்த பணியாளர்களும்,படிப்பை முடித்த பிரஷர்களும் தேவையான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவராக இருந்தாலும் என்ன கோர்ஸ் எடுத்து படித்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு உங்களுடைய படிப்பை தேர்வு செய்யலாம்.

இன்ஃபர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க போகிறது.மற்ற துறைகளைக் காட்டிலும் இந்த துறைக்கு அதிக வரவேற்பு இருக்கும்.வேலை வாய்ப்பு மட்டும் இன்றி இந்த துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குறைந்தபட்ச வருமானமும் அதிகரிக்க போகிறது. புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் அதாவது பிரஷர்களுக்கு குறைந்தபட்சமாக 5,000 இருந்து 6,000 சிங்கப்பூர் டாலர்கள் மாதத்திற்கு வருமானம் என அறிவிக்கப்படலாம். இந்த இன்ஃபர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன் துறைகளில் வேலை செய்ய வெளிநாடுகளில் இருந்து பணியாளர்களை எடுக்கவும் பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் எப்பொழுதும் நிலையான வளர்ச்சியை காட்டும் கட்டுமான துறையே இருக்கிறது.ஆம், கட்டுமான துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க போகிறது.மூன்றாவது இடத்தில் இருப்பது ஃபுட் அண்ட் பீவரைஜ் துறையாக கருதப்படுகிறது.ஆனால் ரியல் எஸ்டேட் துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகிறது.எனவே இது போன்ற துறைகளை தேர்ந்தெடுத்து உங்களுடைய திறன்களை வளர்த்துக் கொண்டு சிங்கப்பூரில் வேலை பெறலாம். எல்லா துறைகளிலும் அடிமட்ட தொழிலாளர்களை தேர்வு செய்வது மட்டுமல்லாமல் டயர் டூவில் இருக்கும் வேலைகளுக்கும் (PMET) வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது. PMET வேலைகளுக்கு கொரோனா காலகட்டத்தில் இருந்து நல்ல வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் இது போன்ற நல் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வேலை வாய்ப்புகள் அதிகரித்தாலும் வேலை கிடைப்பதில் தடைகள் இருக்கின்றன. இத்தகைய தடைகளையும் கண்டறிந்து சரி செய்து வேலை பெற பின் வருபவற்றை கவனிக்கவும்.பொதுவாக சிங்கப்பூரை சேர்ந்தவர்களை வேலைக்கு எடுப்பது விட வெளிநாட்டில் இருந்து வருபவர்களை வேலைக்கு எடுப்பதில் நிறுவனத்தினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆம்,திறன்களை வளர்த்துக் கொள்வதில் காட்டும் அக்கறையின்மையம்,வேலையில் அனுபவங்கள் இல்லாமையும்.இதன் காரணமாக மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்களுக்கு அதாவது உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது.

PMET வேலைகளுக்கு இருக்கும் ரெக்கொயர்மென்டை பூர்த்தி செய்வது பெரும்பாலான தொழிலாளர்கள் தவறவிடுகிறார்கள். இதனால் சில இடங்களில் வேலையின்மை காணப்படுகிறது. MOM அமைப்பு வேலையின்மையின் காரணிகளாக சிலவற்றை மேற்கோள் காட்டி இருக்கிறது.அவை திறன்களை மேம்படுத்தாமல் இருத்தல்,வேலையில் அனுபவ குறைவு,குறைந்த ஊதியம்,சுழற்சி முறை வேலைகள் ஆகியவையே ஆகும்.சிங்கப்பூரை பொறுத்தவரை NON-PMET வேலைகளுக்கு டிகிரியை பெரிதாக எதிர்பார்ப்பதில்லை.ஆனால் 2017 அதற்குப் பிறகு PMET வேலைகளுக்கு டிகிரி முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறது.

இது மட்டும் இன்றி MOM அமைப்பு என்னென்ன வேலைகளுக்கு எவ்வளவு குறைந்தபட்ச வருமானம் கொடுக்க வேண்டும் என்பதையும் அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை வேலை தேடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் Budgeting & Financial Accounting Manager மற்றும் Business Development Manager ஆகிய பணிகளுக்கு அதிகபட்சமாக 10,000 சிங்கப்பூர் டாலர்கள் வழங்கலாம் என அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தகுதியுள்ள, திறன்களை மேம்படுத்திய தொழிலாளர்களை சிங்கப்பூர் வரவேற்கிறது என்பது உறுதியாகிறது.இது அடுத்த தலைமுறை அதாவது மாணவர்களாக இருப்பவர்கள் தங்களுடைய கரியரை தேர்ந்தெடுக்க ஒரு சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும்.
எனவே இந்த சமயத்தில் உங்களுடைய வேலைகளுக்கான திறன்களை பயின்று உங்களுடைய வேலையை தக்கவைத்துக் கொள்வதும் அதோடு வேறு நல்ல வேலையை வாங்கவும் எளிதாக இருக்கும். உங்களுடைய வருமானமும் உயர்வை நோக்கி செல்லும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts