நமது சிங்கப்பூர் அரசு கடந்த சில நாட்களாக 1000-திற்கும் அதிகமாக பதிவாகும் தொற்றினால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 2236 பேருக்கு தொற்று பரவிய நிலையில், மக்கள் சற்று கலக்க நிலைக்கு வந்துள்ளனர் என்றால் அது மிகையல்ல. சரி இந்த தொற்று பரவல் ஒருபுறம் இருக்க அண்டை நாடான இந்தியாவில் இருந்து மக்கள் சிங்கப்பூர் வர பல மாதங்களாக சிரமமான நிலையே நிலவி வருகின்றது. அவ்வப்போது சில தமிழக மற்றும் இந்திய தொழிலாளர்கள் நமது சிங்கப்பூர் அரசின் உதவியோடு இங்கு வந்தாலும் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர தடை இருந்து தான் வருகின்றது.
குறிப்பாக தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து S Pass மற்றும் Employment Pass எனப்படும் பணி பாஸ் வைத்திருப்பவர்கள் சிங்கப்பூர் வரமுடியாமல் தவித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் சிங்கப்பூரின் VTL பட்டியலில் இந்தியா 4ம் வகை நாடுகளில் உள்ளது. இந்த நிலையில் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் நிறுவனத்திற்கு நம்பத்தகுந்த சில வட்டாரங்களில் இருந்து ஒரு Exclusive தகவல் கிடைத்துள்ளது. இந்த வழியை பயன்படுத்தி தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் சிங்கப்பூர் வர ஒரு வழி உள்ளது என்று கூறப்படுகிறது.
அந்த வழி என்னவென்றால் “துபாய்” தான், ஆம் தற்போது இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் சில ஆவணங்களை அளித்தால் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் துபாய் செல்லலாம். உலக அளவில் சில நாடுகள் தற்போது இந்தியர்கள், அனைத்து விதமான “வழிகள்” மூலம் அவர்களது நாட்டிற்கு வரலாம் என்று தளர்வு அளித்துள்ளது. ஆகையால் சிங்கப்பூர் வரவிரும்பும் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்களும் தற்போது துபாய் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வர ஒரு வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிங்கப்பூர் வருவதற்கான Entry Approval 30நாட்களுக்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது நீங்கள் இந்தியாவில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து சிங்கப்பூருக்கு 30 நாட்களுக்குள் செல்ல வேண்டும். ஆனால் இந்த பயணம் சற்று விலை அதிகமானதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் தற்போது துபாயில் Expo 2020 மற்றும் IPL நடந்து வருவதால் அங்கு ஹோட்டல்களின் விலை அதிகமாக உள்ளது. ஆகையால் துபாயில் நண்பர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்களுடன் தங்கியிருந்து அங்கிருந்து சிங்கப்பூர் சிங்கப்பூர் வருவது சிறந்த வழியாக உள்ளது.
குறிப்பு : நமது சிங்கப்பூர் அரசு துபாய் நாட்டை 3ம் வகை நாடுகளில் வைத்துள்ளது என்றபோது, இந்த வழியில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் பயணிக்கும் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக கூறுவது கடினமே. சிங்கப்பூர் அரசு குறைந்த அளவிலான entry approval மட்டுமே அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேறு வழியே இல்லை என்று தவிப்பவர்களுக்கு இந்த வழி ஒரு சிறந்த தீர்வாக உள்ளது என்றால் அது மிகையல்ல. இதேபோல துபாய் மட்டுமல்லாமல் எகிப்து போன்ற நாடுகளில் இருந்தும் சிலர் தமிழகம் முதல் சிங்கப்பூர் வரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source : நந்தனா ஏர் ட்ராவல்ஸ், திருச்சி : தொலைபேசி எண் : 9600223091