TamilSaaga

சிங்கப்பூருக்குள் சட்டத்துக்கு புறம்பாக கொரோனா தொற்றுடன் நுழைந்த இந்தோனேசிய நபர்

இந்தோனேசியாவை சேர்ந்த 26 வயது மதிப்புடைய நபர் ஒருவர் எந்தவித சரியான ஆவணங்களும் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக கடல்வழியே சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும் நேற்று (ஜீன்.17) கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபர்களில் அவரும் ஒருவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரார் அல்லாத கொரோனா நோயாளிகள் 7 பேரில் இந்தோனேசிய நபரும் ஒருவராவார்.

அவருக்கு புதன்கிழமை கொரோனா பரிசோதனை செய்து வெளியான முடிவில் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தார் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

சிங்கப்புரில் வியாழக்கிழமை மொத்தம் 27 புதிய கொரோனா தொற்று நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 20 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள்.

இதில் 14 பேர் முந்தைய கொரோனா தொற்று கணக்கில் இணைக்கப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை நாட்டில் மொத்தமாக 62,366 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 34 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

Related posts