TamilSaaga

காபூலில் இருந்து பிரான்ஸ் அரசு மீட்டு வந்த அந்த 21 இந்தியர்கள் யார்? – வெளியான சுவாரசிய தகவல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலை தலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். கடந்த சில வருடங்களாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெற்று வரும் நிலையில் மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் பல முக்கிய நகரங்களை தலிபான் அமைப்பினர் கைப்பற்றத் தொடங்கினார்.

இறுதியாக கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல், பெரிய அளவில் போராட்டங்கள் இன்றி தலிபான் அமைப்பு கைப்பற்றியது. இதனையடுத்து அந்நாட்டின் பிரதமர் மற்றும் துணைப்பிரதமர் ஆகிய இருவரும் நாட்டை விட்டு வெளியேறினார். இது ஒருபுறமிருக்க மக்கள் பலர் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.

மிகவும் ஆபத்தான முறையில் விமானத்தின் சக்கரத்தில் பயணம் செய்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்களது மக்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் பிரான்ஸ் அரசும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க ஒரு சிறப்பு விமானத்தை சில தினங்களுக்கு முன்பு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் அந்த சிறப்பு விமானத்தில் 21 இந்தியர்களும் பிரான்ஸ் நாட்டிற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அந்த 21 பேரும் காபூலில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தூதரகத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூர்க்கா படையைச் சேர்ந்த வீரர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. “சாவை பார்த்து எனக்கு பயம் கிடையாது என்று ஒரு மனிதன் சொல்வான் என்றால், ஒன்று அவன் பொய் சொல்கிறான். அல்லது அவன் ஒரு குர்க்காகவாக இருப்பான்” என்ற சொல் வழக்கில் உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts