TamilSaaga

“சிங்கப்பூரில் கொட்டித்தீர்த்த கனமழை” – சாலையோரம் நின்ற கார் மீது முறிந்து விழுந்த மரம் – காருக்குள் சிக்கிய ஓட்டுநர்

சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) பிற்பகல் சிங்கப்பூரின் சில பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்ததைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் பல whatsapp குழுக்களில் பரவலாக பகிரப்பட்டது. சிங்கப்பூர் தேசிய நீர் நிறுவனமான PUB நேற்று பல சந்தர்ப்பங்களில் வெள்ளம் மற்றும் கனமழை பற்றிய எச்சரிக்கைகளை வெளியிட்டது, அதில் ஒன்று தான் நேற்று மாலை 4.35 மணிக்கு மேல் பாயா லெபார் சாலைக்கான திடீர் வெள்ள எச்சரிக்கை.

சிங்கப்பூரில் ஊழியர் மீது கொதிக்கும் சூப்பை வீசிய அதிகாரி – “தொழிலாளி-னா அவ்வளவு இளக்காரமா போச்சா?”

“கனமழை காரணமாக, இந்த பகுதிகளில் உள்ள வடிகால்களில் நீர்மட்டம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது என்றும் தயவுசெய்து அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மேற்கண்ட பகுதிகளைத் தவிர்க்கவும்” என்று PUB தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (MSS) ட்விட்டரில் நேற்று பிற்பகலில் வெளியிட்ட பதிவில் “பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்” என்று எச்சரித்தது நினைவுகூரத்தக்கது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் வாகனங்கள் மீது மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்து கிடப்பதை வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்டுகின்றன. அதில் ஒரு வீடியோவில் சுங்கே கெடாங்கில் SMRT பேருந்தின் மீது மரம் விழுந்து கிடப்பதை வீடியோ ஒன்று காட்டியது. மற்றொன்றில், மரத்தின் சில பகுதிகள் அப்பகுதியில் சாலையை மறித்து கிடந்தன. SMRT வெளியிட்ட தகவலின்படி நேற்று மாலை 4.25 மணியளவில் தங்கள் சேவை எண் 975ன் மேல் விழுந்தது. இந்த சம்பவம் நடந்தபோது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும் இதனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் SMRT கூறியது.

“சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் உடனடியாக தேவை” – வெளிப்படையாக அறிவித்த MOH – வெளிநாட்டு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாமா?

உடனடியாக SCDF படையினர் வரவழைக்கப்பட்டு அந்த மரம் அகற்றப்பட்டது, மற்றொரு சம்பவத்தில், பூங்கோலில் ஒரு வெள்ளை நிற கார் மீது மரம் விழுந்து, அதன் கண்ணாடியை உடைத்தது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் பிளாக் 289C புங்கோல் பிளேஸுக்கு அருகிலுள்ள கார்பார்க் டிரைவ் வேயில் இருந்து உதவிக்கான அழைப்பு வந்ததாக SCDF கூறியது. “SCDF அங்கு வந்தபோது ஒரு நபர் காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டதை கண்ட தற்காப்பு படையினர் வெட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி காயங்கள் எதுவும் இல்லாமல் அவரை காப்பாற்றியது”.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts