TamilSaaga

“உள்நாடோ.. வெளிநாடோ.. எல்லா ஊழியர்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பு” : சிங்கப்பூரில் அதிகரித்த பணியிட உயிரிழப்புகள் – வருத்தப்பட்ட பிரதமர் லீ

நமது சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், இன்று மே 9 அன்று ஒரு வெளியிட்ட தனது முகநூல் பதிவில், சிங்கப்பூரில் சமீபகாலமாக பணியிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலையளிக்கின்றது என்று கூறினார்.

இந்த ஆண்டு மட்டும் 20 பணியிட மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 2022 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது மிகவும் அதிகமானது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

அவர் எழுதிய பதிவில் : “இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 20 பேர் பணியிட விபத்துகளில் இறந்துள்ளனர், இதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பேர் இறந்துள்ளனர். இது மிகவும் அதிகமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

PM லீயின் கூற்றுப்படி, நிறுவனங்கள் “பணியிட பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டும், தங்கள் பாதுகாப்பு செயல்முறைகளை வலுப்படுத்த வேண்டும் மற்றும் தொழிலாளர்களால் எழுப்பப்படும் பாதுகாப்பு பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்திசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இனி பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற வரிசையில் நிற்கவேண்டாம்.. டிஜிட்டல் மயமாகும் சிங்கை – Online சேவைக்கு எவ்வளவு கட்டணம்? ICA அறிவிப்பு

சிங்கப்பூரில் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டு பல நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், பாதுகாப்புத் தரங்கள் மற்றும் நடைமுறைகள் நழுவிவிட்டதாகத் தெரிகிறது என்றும் பிரதமர் லீ அந்த பதிவில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் இதுவே முதல் முறை.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக லிட்டில் இந்தியாவில் உதயமாகும் “புதிய சேவை” – “தமிழ் மொழியிலும் சேவை உண்டு”!

பின்னர் அவர் “இதைச் சரியாகச் செய்ய” வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் “பணியிடத்தில் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ள” சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

“அனைவருக்கும் பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்வோம், இதனால் எங்கள் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியும்”. “உயிர்கள் ஆபத்தில் உள்ளது. எங்கள் தொழிலாளர்கள் உள்நாடோ அல்லது வெளிநாடோ அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்றார் அவர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts