TamilSaaga

சிங்கப்பூருக்கு எண்ட்ரி கொடுக்க இந்த டாக்குமெண்ட்டினை மறந்துடாதீங்க… அப்புறம் ரிடர்ன் இந்தியா போக வேண்டியது தான்!

சிங்கப்பூருக்குள் இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் பல நாடுகளில் இருந்து வேலைக்கு பலரும் விமான நிலையம் வந்து இறங்குகிறார்கள். அதே வேளையில், சிங்கையை சுற்றி பார்க்க வரும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. வருடத்திற்கு பில்லியன் கணக்கில் சுற்றுலா பயணிகள் உலகெங்கிலும் இருந்து சிங்கப்பூர் வருகின்றனர்.

ஒவ்வொரு நாட்டினை சேர்ந்தவர்களுக்கும் சிங்கப்பூர் இமிகிரேஷனில் கேட்கப்படும் டாக்குமெண்ட் என்பது மாறுப்படும். இதில் இந்திய பயணிகளுக்கு கேட்கப்படும் டாக்குமெண்ட்டின் விவரங்களை தெரிந்து கொள்வது உங்களுக்கு பின்னாட்களில் பெரிய உதவியாக இருக்கும். இந்த பதிவில் வொர்க் பாஸ்களுக்கு என்று இல்லாமல் பொதுவாக சிங்கப்பூர் வரும் இந்திய பயணிகளுக்கு கேட்கப்படும் டாக்குமெண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: வற்றாத நதியே காஞ்சி போய்ட்டா? சிங்கப்பூரின் MOM வெப்சைட் மீதே கை வைத்த தில்லாலங்கடி கும்பல்… விசா செக் செய்ய போற முன்னாடி இத செக் பண்ணிக்கோங்கோ!

சிங்கப்பூர் வழங்கிய பயண ஆவணத்தை நீங்கள் வைத்திருந்தால், நாட்டிற்குள் நுழைய உங்களுக்கு விசா தேவைப்படும். இருப்பினும், diplomatic, official மற்றும் சேவை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நுழைவதற்கு விசா தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

பிசினஸ் அல்லது சுற்றுலாவிற்கு வருகை தரும் பயணிகளுக்கான நுழைவு விசாவிற்கு விண்ணப்பிக்க, உங்களுக்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்:

  • நீங்கள் கையொப்பமிட்ட படிவம் 14A முறையாக பூர்த்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும். இந்த சான்று PDF வடிவத்தில், 202KBக்குள் இருக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள தகவலின்படியே விசா விண்ணப்பம் செய்யப்படும். படிவத்தை சமர்ப்பிக்க ஐசிஏ கோரலாம்.
  • கடந்த மூன்று மாதங்களில் எடுக்கப்பட்ட உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான வண்ணப் புகைப்படம்.
  • உங்கள் பாஸ்போர்ட் பயோடேட்டா பக்கத்தின் புகைப்பட நகல் (நீங்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்த நாளிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டும்)
  • கூடுதல் துணை ஆவணங்கள் ஒவ்வொரு விண்ணப்பத்தின் தகவலின் அடிப்படையில் தேவைகள் மாறுப்படலாம்.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு வேலை கேட்டு அலுத்து போயிட்டீங்களா? Chill பண்ணுங்க.. நீங்களே வேலைக்கு Apply பண்ணலாம்… பிடிச்ச வேலையும் தட்டி தூக்குலாம்

உங்களின் விசா விண்ணப்பத்தை e-Service மூலம் ஏஜென்ட் அல்லது சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் தொடர்பு மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். சிங்கப்பூருக்கு வருவதற்கு விசிட் விசா உங்களுக்கு அதிகப்பட்சமாக 30 நாட்களுக்கு கொடுக்கப்படும். விசிட் விசாவிற்கு $30 சிங்கப்பூர் டாலர்கள் கேட்கப்படும். இது refund செய்யப்படாது. மாஸ்டர்கார்டு கிரெடிட்/டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.

உங்கள் விசா விண்ணப்பம் மூன்று வேலை நாட்களுக்குள் (சமர்ப்பித்த நாள் தவிர்த்து) செயலாக்கப்படும். சிலவற்றுக்கு அதிக நாட்கள் எடுக்கலாம். ஒவ்வொரு விசா விண்ணப்பமும் அதன் சொந்த தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், உங்களின் உள்ளூர் தொடர்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விசா ஏஜென்ட் மூலம் உங்களுக்கான இ-விசாவின் நகலை அச்சிட இ-சேவையைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts