சிங்கப்பூரில் ஈ-சிகரெட்கள் மற்றும் அது தொடர்புடைய பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக 13 பேருக்கு 3,000 முதல் 53,500 டாலர் வரைவ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அறிவியல் ஆணையம் (ஹெச்எஸ்ஏ) இன்று புதன்கிழமை (ஜூலை 28) தெரிவித்துள்ளது.
20 முதல் 40 வயது வரையிலான குற்றவாளிகள் கடந்த 2021 மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளனர். மொத்த அபராதமாக 64,500 டாலர் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டிக்கப்பட 13 பேரில், இருவர் தனித்தனி குற்றங்களுக்காக 33 மாதங்கள் மற்றும் 13 வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
“அவர்கள் வெளிநாட்டு சப்ளையர்களிடமிருந்து ஈ-சிகரெட்கள் மற்றும் தொடர்புடைய பொருட்களை வாங்கி பல்வேறு உள்ளூர் சமூக ஊடகங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களில் சட்டவிரோதமாக விற்றனர்” என்று HSA வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது 20,000 டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஈ-சிகரெட்கள் மற்றும் அதன் துணைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி 1 சிங்கப்பூரில் முதல் ஈ-சிகரெட்கள் தயாரிப்புகளை வைத்திருத்தல், வாங்குவது அல்லது பயன்படுத்துவது ஒரு குற்றமாகும், இந்த குற்றத்திற்கு 2,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.