தமிழ் மொழியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தமிழ் முழக்கங்களை எழுப்ப, முதன்முறையாக நாடாளுமன்றம் திகைத்து நின்ற நிகழ்வை தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 40 மசோதாக்கள் மற்றும் 5 அவசரச் சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வருவதால் மத்திய அரசு தனது மசோதாக்களைத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (267.8.21) நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சி எம்பிகளையும் தமிழிலில் குரல் எழுப்பினர். முதலில் பஞ்சாப் எம்பி ஜஸ்பீர் சிங், ‘வேண்டும் வேண்டும்’ என்றும் கோஷமிடத் தொடங்க, அவரோடு இணைந்து அனைத்து எம்பிகளும் ‘நீதி வேண்டும்’ என்ற கோஷத்தை ஒருங்கிணைந்து எழுப்பினார்கள்.
இதுப்பற்றி காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்,
‘இதுவரை நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் முழுக்கங்கள் எழுப்பப்படும். ஆனால் முதல் முறையாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து, ‘வேண்டும் விவாதம் வேண்டும்’ எனத் தமிழில் முழக்கமிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.