TamilSaaga

“சிங்கப்பூர் ஜலான் துகாங் Dormitory” : தொழிலாளர்கள் எழுப்பிய புகார்கள் – பார்வையிட்ட சிங்கப்பூர் MWC – முழு விவரம்

சிங்கப்பூரில் வெஸ்ட்லைட் ஜலான் துகாங் தங்குமிடத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்தின் அதிகாரிகளின் (MWC) வருகையின்போது தங்கள் விடுதியில் உறுதிப்படுத்தப்பட்ட பெருந்தொற்று வழக்குகளை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது என்றும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து பிரச்சினைகள் இருப்பதாக அவர்களிடம் கூறினார்கள்.

MWC-ன் ஊழியர்கள், கப்பல் கட்டும் சங்கம் மற்றும் கடல் பொறியியல் ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், குடியிருப்புவாசிகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தவும் தங்குமிடத்திற்கு வருகை தந்தனர் என்று MWC தலைவர் யியோ குவாட் குவாங் இன்று புதன்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் விடுதிகளுக்கு வந்த MWC அதிகாரிகள், தொழிலாளர்களின் “உடல் மற்றும் அவர்களின் மனநிலை குறித்து கேட்டறிந்தனர். கிட்டத்தட்ட 200 தொழிலாளர்களுடன் அந்த குழுவினர் உரையாடி குறைநிறைகளை கேட்டறிந்தனர். MWC என்பது தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (SNEF) ஆகியவற்றின் இருதரப்பு முயற்சியாகும்.

விடுதிகளில் உள்ள பெருந்தொற்று வழக்குகளை மாற்றுவதில் தாமதம், உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காதது மற்றும் ஜூராங்கில் உள்ள தங்குமிடத்தில் உணவு தரமில்லாதது போன்ற கூற்றுகளைத் தொடர்ந்து, ஜூரோங்கில் உள்ள தங்கும் விடுகளை கவனிக்க காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் CNA செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 13 வரை “புதிய சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை வெளியிடுவதில் சில கோளாறுகள்” இருந்தன என்றும் அவை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் MWC கூறியது.

எவ்வாறாயினும், பெருந்தொற்று வழக்குகளை கையாள்வதில் இருந்த தாமதங்களை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் “உறுதிப்படுத்தினர்” என்றும் MWC தெரிவித்தது. மேலும் வழங்கப்பட்ட உணவு குறித்து தொழிலாளர்கள் குறையேதும் கூறவில்லை என்றும் இருப்பினும் அதிகாரிகள் இந்த விஷயத்தை விசாரித்து வருவதை ஒப்புக் கொண்டனர்.

Related posts