TamilSaaga

“இவங்க தான் ரியல் ஹீரோயின்” : அமெரிக்க ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்த முதல் தமிழ் நடிகை!

சினிமா என்பது ஒரு மாய உலகம் என்பார்கள், மக்களின் அபிமானத்தை பெற்றுவிட்டால் போதும் நிச்சயம் யாராக இருந்தாலும் ஒரு டாப் நடிகராக வந்துவிடலாம் என்பது தான் நிதர்சனம். நடிகர் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர் என்பது ஒருபுறம் இருந்தாலும், மக்களின் அபிமானம் என்பதே அவர்கள் பெரும் மிகப்பெரிய சம்பளம் என்பதே உண்மை. புதுமுக நடிகர் நடிகைகள் யாரை கேட்டாலும் சினிமா உலகில் நானும் நிச்சயம் ஒரு பெரிய நடிகனாக வருவேன், அதுவே எனது லட்சியம் என்பார்கள். அது உண்மை தான், சினிமாவை நேசிப்பவர்களுக்கு அதுவே கடவுள்.

Exclusive : “சிங்கப்பூர் செல்ல ஏர்போர்ட் வந்ததுக்கு அப்புறம் ‘கேன்சல்’-னு சொல்றாங்க”.. ஒவ்வொரு ‘திங்களும்’ இதே பிரச்சனை தான் – ஏர் இந்தியா மீது குவியும் புகார்

ஆனால் மக்களுக்கு தேவையான கருத்துக்களை சொல்லவேண்டும் என்று ஒரு தமிழ் படத்தில் நடித்து அதன் பிறகு, தான் மிகுவும் நேசித்த ராணுவத்திற்கே சேவை செய்ய சென்ற ஒரு தமிழ் நடிகை இன்று பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றார். அவர் தான் அமெரிக்க வாழ் தமிழர் அகிலா நாராயணன். பல சமூக கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு திரைப்படம் தான் “காதம்பரி” இந்தப் படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியான நிலையில் அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் அகிலா.

அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான அகிலா கலைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் நடிகையாக களமிறங்கினார். நடிப்பு, பாடல் என்று இரு துறைகளிலும் முழு ஈடுபாட்டுடன் கலக்கி வந்த அகிலாவிற்கு சிறு வயது முதலே ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை இருந்துவந்துள்ளது. ஆனால் அமெரிக்க ராணுவத்தில் இணைந்து, படித்து, பட்டம் பெற்று உள்-நுழைவது என்பது மிகவும் சவாலான ஒரு காரியம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது மிகக் கடின உழைப்பினால் தற்பொழுது அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெற்று அங்கு வழக்கறிஞராக இணைந்துள்ளார் அகிலா. இதன் மூலம் அமெரிக்க இராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையையும் அவர் பெறுகின்றார்.

சாங்கி ஏர்போர்ட்டில் “Assistant Operator”-ஆக பணிபுரியும் தமிழர் – “போலி FB ஐடி”யில் பணம் கேட்கும் மோசடி கும்பல் – “அவ்வளவு பெரிய ஆளாகிட்டியா மாப்ள?” என கலாய்க்கும் நண்பர்கள்

ராணுவத்தில் இணைந்தாலும் தனது கலைப் பயணத்தை தொடர்ந்து நடத்துவதற்காக இணைய வழியில் இவர் இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக விரைவில் பணியாற்றவிருக்கின்ற அகிலா நாராயணன், தான் வாழும் அமெரிக்க நாட்டிற்காக சேவை செய்வதில் மிகுந்த பெருமை அடைவதாகத் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts