TamilSaaga

சிங்கப்பூரில் கடந்த 5 மாதத்தில் 8000 பேர் பாதிப்பு.. விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு.. மக்களே உஷார் – அமைச்சர் Desmond Tan எச்சரிக்கை

சிங்கப்பூரில் இந்த 2022ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 8,000 ஐத் தாண்டியுள்ளது, கடந்த 2021ம் ஆண்டில் முழுவதிலும் 5,258 வழக்குகள் மட்டுமே பதிவானது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் பொதுவாக டெங்கு நோய் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையில் அதிகரிக்கும், ஆனால் அந்த காலம் வரும் முன்பே இந்த அதிகரிப்பு கவலையளிக்கிறது என்று, இன்று சனிக்கிழமை (மே 14) வூட்ஸ்வேல் காண்டோமினியத்திற்கு வந்த, ​​நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டெஸ்மண்ட் டான் கூறினார்.

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் டிரைவ் 72ல் உள்ள தனியார் எஸ்டேட்டில், இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் முதல் வழக்கு கண்டறியப்பட்டதில் இருந்து சுமார் 96 வழக்குகள் அங்கு இப்போது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சராகவும் இருக்கும் திரு. டான் பேசும்போது : “வாரத்தில் வழக்குகளின் எண்ணிக்கையில் செங்குத்தான அதிகரிப்பை நாங்கள் காண்கிறோம். உண்மையில் சிங்கப்பூர் டெங்குவை பொறுத்தவரை ஒரு அவசர கட்டத்தில் உள்ளது என்றார். மேலும் அதிகரிப்பதைத் தடுக்க நாம் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சிங்கப்பூர் to பழனி பயணம்.. ஹெலிகாப்டரில் சென்று சுவாமி தரிசனம் – மலைக்கோயிலுக்கு சரக்கு வாகனம் காணிக்கையாக கொடுத்த சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்

மே 13ம் தேதி வரை இந்த வாரம் அதிகபட்சமாக 1,055 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூரில் 280 செயலில் உள்ள டெங்கு கிளஸ்ட்டர்கள் பதிவாகியுள்ளன, ஏப்ரல் இறுதியில் அது 196ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை, NEA நாடு முழுவதும் சுமார் 2,43,000 இடங்களில் ஆய்வுகளை நடத்தியது, இதில் 1900 கட்டுமான தளங்கள் அடங்கும்.

மக்கள் அதிக விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே இந்த இக்கட்டான சூழலில் இருந்து சிங்கப்பூர் மீண்டு வரமுடியும் என்று அமைச்சர் டெஸ்மாண்ட் தெரிவித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts