சிங்கப்பூரில் வேலைக்கு சேரும் வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் விடுதிகளில் தான் தங்குவது வழக்கம். வொர்க் பெர்மிட்டில் வேலைக்கு சேரும் ஊழியர்கள் பெரும்பாலும் ஒரே அறையில் ஐந்து முதல் ஆறு பேர் தங்கும் அளவிற்கு உள்ள அறைகளில் தங்கி தான் வேலையை பார்த்து வருகின்றனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு அறையில் குறிப்பிட்ட ஊழியர்கள் தான் தங்க வேண்டும் என்ற விதிமுறைகளை மனித வள அமைச்சகம் வெளியிட்டு இருந்தது.
கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு சிங்கப்பூரின் பொருளாதாரம் ஆனது மெதுவாக மீண்டு வரும் நிலையில் தற்போது அதிகப்படியான வெளிநாட்டவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் ஒர்க் பர்மீட்டின் கீழ் வேலைக்கு வருவதால் அவர்கள் தங்குவதற்கு போதுமான அளவு அறைகள் இல்லாத காரணத்தினால் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதில் கட்டுமானத்துறையில் பணி புரியும் வெளிநாட்டவர்களே அதிகம் என கூறப்படுகின்றது. எனவே படுக்கை வசதிகளை அதிகரிக்க மனிதவள அமைச்சகம் ஏற்பாடு செய்து வருவதாக கூறியுள்ளது. மேலும் முதலாளிகள் வேலைக்கு ஆட்களை எடுக்கும் பொழுது தங்க வைக்கும் இடவசதியினை கருத்தில் கொண்டு ஆட்களை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இப்பொழுது நிலைமையை தற்காலிகமாக சமாளிக்க ஊழியர்கள் தங்குவதற்கான தற்காலிக இட வசதிகள் ஏற்படுத்தி உள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.