TamilSaaga

நம்ம சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருந்தால் எத்தனை நாட்டுக்கு போகலாம் தெரியுமா? – ஒரு Detailed Report

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் எந்த அளவுக்கு செல்வாக்கு மிகுந்தது என்பது உலக நாடுகளின் வரிசையில் சர்வதேச செல்வாக்கு மற்றும் வர்த்தகத்தை பொருத்தே அமைகின்றது. ஆகையால் இவைகளைப் பொறுத்தே ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டின் செல்வாக்கு மாறுபடுகின்றது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை கொண்டு விசா இல்லாமல் எத்தனை இடங்களுக்கு ஒரு தனிநபரால் செல்ல முடியும் என்ற கணக்கை வைத்து எந்த பாஸ்போர்ட் சிறந்தது என்று “Global Passport Ranking” கூறுகிறது.

இந்நிலையில் இந்த பதிவில் உலகின் டாப் 10 செல்வாக்கு நிறைந்த பாஸ்போர்ட்டுகளை பற்றி பார்க்கலாம்

10வது இடத்தில் : ஹங்கேரி பாஸ்போர்ட் – இந்த பாஸ்ப்போர்ட்டை கொண்டு 184 இடங்களுக்கு செல்லலாம்.

9வது இடத்தில் : ஆஸ்திரேலியா மற்றும் கனடா – இந்த பாஸ்ப்போர்ட்களை கொண்டு 184 இடங்களுக்கு செல்லலாம்.

8வது இடத்தில் : செக் குடியரசு, கிரீஸ், மால்டா, நார்வே – இந்த பாஸ்ப்போர்ட்டை கொண்டு 186 இடங்களுக்கு செல்லலாம்.

7வது இடத்தில் : பெல்ஜியம், நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா – இந்த பாஸ்ப்போர்ட்டை கொண்டு 187 இடங்களுக்கு செல்லலாம்.

6வது இடத்தில் : பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்வீடன் – இந்த பாஸ்ப்போர்ட்டை கொண்டு 188 இடங்களுக்கு செல்லலாம்.

5வது இடத்தில் : ஆஸ்திரியா, டென்மார்க் – இந்த பாஸ்ப்போர்ட்டை கொண்டு 189 இடங்களுக்கு செல்லலாம்.

4வது இடத்தில் – பின்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், ஸ்பெயின் – இந்த பாஸ்ப்போர்ட்டை கொண்டு 190 இடங்களுக்கு செல்லலாம்.

3வது இடத்தில் – ஜெர்மனி மற்றும் தென்கொரியா – இந்த பாஸ்ப்போர்ட்டை கொண்டு 191 இடங்களுக்கு செல்லலாம்.

2வது இடத்தில் – நமது சிங்கப்பூர் – இந்த பாஸ்ப்போர்ட்டை கொண்டு 192 இடங்களுக்கு செல்லலாம்.

முதலிடத்தில் – ஜப்பான் – ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருந்தால் 193 இடங்களுக்கு நீங்கள் செல்லலாம்.

இந்த பட்டியலில் அண்டை நாடான இந்தியா பிடித்திருக்கும் இடம் 90 – இந்திய பாஸ்போர்ட் கொண்டு 54 இடங்களுக்கு செல்லமுடியும்

Related posts