TamilSaaga

சிங்கப்பூர் ஊழியர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பாராட்டு… சிறந்த தொழிலாளர்களின் பட்டியலில் உலகளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?

உலக அளவில் திறமையான தொழிலாளர்களின் பட்டியலை பிரஞ்சு நாட்டை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஊழியர்கள் தொழில் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மிகச் சிறந்தவர்கள் என்ற முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் 134 நாடுகளில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது.உலகளவில் அறிவுத்திறன் அடிப்படையில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது. மேலும் தொழில் மற்றும் தொழில்நுட்பத் திறன் அடிப்படையில் உலக அளவில் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

உலக அளவில் அனைத்து நாடுகளையும் கணக்கில் கொள்ளும் பொழுது ஸ்விட்சர்லாந்து முதல் இடத்திலும் சிங்கப்பூர் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சிங்கப்பூரின் தொழில் கட்டமைப்பானது அதிகப்படியான ஊதியத்தின் காரணமாக வெளிநாட்டவர்களை கவர்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம். சிங்கப்பூரை பொறுத்தவரை அதிகப்படியான வெளிநாட்டு ஊழியர்கள் வேலை பார்ப்பதால் அவர்களின் திறனுக்கு கிடைத்தள்ள அங்கீகாரம் இதுவாகும்.

Related posts