TamilSaaga

சிங்கப்பூரில் ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம் : புத்தாண்டில் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு விதிகள் – MTF ஆய்வு

சிங்கப்பூரில் பல அமைச்சக பணிக்குழு (MTF) நேற்று ஜனவரி 2 கிளார்க் குவேயில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம் “பாதுகாப்பான மேலாண்மை விதிகளை மீறியுள்ளது” என்றும், இது “அதிக நோய் பரவல் உள்ள அபாய நிகழ்வு” என்றும் கூறியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31, 2021 அன்று இரவு, நூற்றுக்கணக்கானோர் தன்னிச்சையாக ரிவர்சைடு பாயின்ட் முன்பு கூடி புத்தாண்டைக் கொண்டாடுவதைக் நம்மால் நன்றாக காண முடிந்தது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் Orchard சாலை சந்திப்பில் விபத்து” : சொகுசு கார் மோதியதில் மூவருக்கு காயம் – ஸ்தம்பித்த போக்குவரத்து

இணையத்தில் வலம்வரும் அந்த வீடியோவில் பலர் முகமூடி இல்லாமல் ஒரே இடத்தில் குழுமியது நன்றாக தெரிந்தது. இந்த ஆண்டு பல நாடுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டன என்று MTF மேலும் கூறியது. தமிழகத்திலும் கடற்கரை போன்ற இடங்களிலும், சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிங்கப்பூரில், சமூகக் கூட்டங்களுக்கு அதிகபட்சமாக ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் இந்த விவகாரத்தை அமலாக்க முகமைகள் மிக கடுமையாக விசாரித்து வருவதாகவும் MTF தெரிவித்துள்ளது.

“புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான ஆசை மற்றும் உற்சாகத்தை, குறிப்பாக இரண்டு வருட சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு” அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று MTF கூறியது. இருப்பினும், “குடிமைப் பொறுப்பை” செயல்படுத்த வேண்டிய அவசியம் இன்னும் உள்ளது என்பதை MTF பொதுமக்களுக்கு நினைவூட்டியது. “ஒரு சமூகமாக, எங்களால் முடிந்ததைச் செய்துள்ளோம், ஆனால் நாம் இன்னும் ஒரு தொற்றுநோய் நெருக்கடியின் மத்தியில் இருக்கிறோம் என்பதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். மேலும் நாம் இன்னும் அதிக அளவில் குடிமைப் பொறுப்பை செயல்படுத்த வேண்டும்.

“சிங்கப்பூர் Woodlands Dormitory” : தலையில் தாக்கப்பட்டு இறந்த “தொழிலாளி ராஜேந்திரன்” – வெற்றிவேல் என்ற தொழிலாளி கைது

அப்படி செய்தால் மட்டுமே நிலைமை தொடர்ந்து மேம்படும், மேலும் 2022 மிகவும் சாதாரண ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று MTF தெரிவித்தது. இந்த தொற்றுடன் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் போராடி வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது. பலரின் தியாகங்கள் இதில் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts