TamilSaaga

“சிங்கப்பூரில் 56ஆக உயர்ந்த பெருந்தொற்று பலி எண்ணிக்கை” – 93 வயது மூதாட்டி காலமானார்

சிங்கப்பூரில் 93 வயதான பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 8) பெருந்தொற்று சிக்கலால் இறந்தார். சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக இறக்கும் 56 வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த மூதாட்டி தடுப்பூசி போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருந்தொற்று வழக்கு 71194 என அழைக்கப்படும் அந்த சிங்கப்பூர் பெண், தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை மேலும் அவருக்கு நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடேமியாவின் வரலாறு இருந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தனது தினசரி பதிவில் தெரிவித்துள்ளது.

அந்த மூதாட்டிக்கு கடந்த செப்டம்பர் 2ம் தேதி தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்துள்ளன. இதனையடுத்து அவர் செப்டம்பர் 5ம் தேதி தேசிய தொற்று நோய்களுக்கான மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை 347 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

நேற்று பதிவாகியுள்ள புதிய வழக்குகளில், மூன்று பேருக்கு தடுப்பூசி போடப்படாத அல்லது ஓரளவு தடுப்பூசி போடப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். மூவரும் கடுமையான நோய் அபாயத்தில் உள்ளனர் என்று MOH தனது மாலை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related posts