TamilSaaga

“உள்ளூர் சுற்றுலாவை ஆதரிக்கும் SingapoRediscovers Vouchers” : STB அறிவித்த புதிய சலுகை – முழு விவரம்

சிங்கப்பூரில் நமது குடிமக்கள் தங்கள் அசல் அடையாள ஆவணங்களான NRIC எனப்படும் தேசிய சேவை அடையாள ஆவணம் அல்லது சிங்கப்பூர் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி தங்கள் digital SingapoRediscovers Vouchersகளை பயன்படுத்தி சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். மக்கள் இதை சிங்கப்பூரில் உள்ள 34 சமூக மையங்கள் மற்றும் குடியிருப்போர் குழு மையங்களில் செய்யலாம் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 30) வெளியிட்ட அறிக்கையில் ​​தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய முறை, தற்போதுள்ள சிங்க்பாஸ் சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்கிறது மற்றும் சிங்பாஸை அணுக முடியாத குடிமக்களுக்கு எளிதாக்குகிறத என்று STB தனது செய்தி வெளியீட்டில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவு கூட்டாளர்களுடனான மீட்பு செயல்முறையை மதிப்பாய்வு செய்த பின்னர் இந்த திட்டத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி குடிமக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்ற பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற சமூக மையங்கள் மற்றும் குடியிருப்போர் குழு மையங்களில் சிறப்பு பாப்-அப் சாவடிகளை ஏற்பாடு செய்வதற்கும் மக்கள் செயல்பாடுகள் மற்றும் சுற்றுப்பயணங்களை எளிதாக பதிவு செய்வதற்கும் மக்கள் சங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக STB தெரிவித்துள்ளது.

இம்மாதம் ஆகஸ்ட் 1ம் தேதி வரை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வயது முதிர்ந்த குடிமக்கள் தங்கள் வவுச்சர்களை குறைந்தது ஒரு முறையாவது பயன்படுத்தியுள்ளனர் என்றும். இது 1.4 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts