TamilSaaga

பசீர் பஞ்சாங்கில் 4 ஹெக்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்படும் பேருந்து நிலையம்… டென்டரை அறிவித்த சிங்கப்பூர் அரசு!

சிங்கப்பூரில் உள்ள பசீர் பஞ்சாங்கில் புதிதாக பிரம்மாண்டமான பேருந்து நிறுத்தம் கட்டப்படும் பணியானது அடுத்த ஆண்டு முதல் துவங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பசீர் பஞ்சாங்கத்தில் உள்ள டிஸ்ட்ரி பார்க்கில் கிட்டத்தட்ட 550 பேருந்துகள் நிறுத்தப்படும் அளவிற்கு பெரிதாக பேருந்து நிறுத்தம் கட்டப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த கட்டிடம் ஆனது கிட்டத்தட்ட ஆறு கால்பந்து மைதானங்களில் அளவிற்கு அமைக்கப்படும் என்றும், தென்பகுதியில் இயங்கும் அனைத்து பேருந்துகளும் நிறுத்திக் கொள்வதற்கு வசதியாக இந்த பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள.

நான்கு ஹெக்டர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பேருந்து நிலையம் ஆனது 2029 இல் கட்டி முடிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த இடம் காலியாக இருக்கும் பட்சத்தில் பசிர் பஞ்சாங் ஹார்பருக்கு வருபவர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக பயன்படுத்தும் இடமாக இருந்தது. எனவே இந்த இடத்தை உபயோகமாக பயன்படுத்தலாம் என்ற நோக்கில் அரசு கட்டடத்தை கட்டுவதற்கான டென்டரை வியாழக்கிழமை அறிவித்தது.

மேலும் இங்கு ஏழு மாடி கட்டிடம் ஒன்று கட்டப்படும் என்றும், அதில் போக்குவரத்து ஊழியர்கள் தங்கிக் கொள்ளுமாறு வசதிகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழுதான பேருந்துகளை சரி செய்வதற்கும், பேருந்துகளை பராமரிப்பதற்கும் தேவையான வசதிகள் இங்கு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையம் திறக்கப்படும் பட்சத்தில் மக்களுக்கு மேலும் மேம்பட்ட பேருந்து வசதி கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

Related posts