TamilSaaga

ஹோட்டல் துறையில் இந்தியர்களுக்கு அதிகரிக்கும் வேலை வாய்ப்பு… செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி!

சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவுகளுக்கு தேவையான சமையல்காரர்கள் கிடைக்காத காரணத்தினால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. முக்கியமாக சொல்லப்போனால் லிட்டில் இந்தியா பகுதியில் தமிழக உணவகங்கள் நிறைய உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த பலரும் வார விடுமுறை நாட்களில் தங்கள் குடும்பத்துடன் பாரம்பரிய உணவை சுவைப்பதற்காக லிட்டில் இந்தியா வருவதுண்டு. ஆனால், சில மாதங்களாக சமையல்காரர்கள் மற்றும் வேலை செய்யும் ஊழியர்களின் தட்டுப்பாட்டினால் உணவகங்கள் மூடப்படும் நிலையிருந்தது.

போட்டோக்களை பொருத்தவரை சிங்கப்பூர் அரசனது மலேசியா, சீனா, மேற்காசியா ஆகிய நாடுகளில் இருந்து சமையல் நிபுணர்களை ஒர்க் பெர்மிட்டின் கீழே எடுத்துக் கொள்ள அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழக உணவுகளை பொருத்தவரை இந்தியாவில் இருந்து அதிக சமையல்காரர்கள் தேவை என்பதால் இந்தியாவிலிருந்து ஊழியர்களை வரவழைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பல உணவகங்கள் மூடப்பட்டன. பல கிளைகள் இருந்த உணவகங்களும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக தங்கள் கிளைகளின் எண்ணிக்கையை குறைத்தன. வருமானம் நன்றாக இருந்த பொழுதிலும் ஊழியர் பற்றாக்குறை என்ற ஒரே காரணத்தினால் உணவகங்கள் மூடப்பட்டதால் பல தமிழர்களும் சிரமத்து ஆளாயினர்.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் இருந்தும் சமையல் தொழில்நுட்ப வல்லுநர்களை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஹோட்டல் உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இத்திட்டமானது வரவேற்கத்தக்க திட்டம் என்று சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் அமைப்பின் செயலாளர் திரு மகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது இந்தியாவின் பாரம்பரிய உணவுகளை கட்டி காப்பதற்கு மிகவும் உதவியான திட்டமாகும் எனவும் தெரிவித்தார். எனவே, இனி சிங்கப்பூரில் வாழும் தமிழர்களும் சிரமமின்றி இந்தியாவின் பாரம்பரிய உணவுகளை சுவைத்து மகிழலாம். அது மட்டுமல்லாமல், சமையல் துறையை சேர்ந்த பல இந்தியர்களுக்கும் இனிய சிங்கப்பூரில் எளிதாக வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

Related posts