நமது சிங்கப்பூரைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் குழு ஒன்று, தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தது. அங்கு மோட்டார் சைக்கிளில் ஜாம் ஜாமென அந்த குழு ஊர் சுற்றி வந்திருக்கிறது.
அப்போது, அங்கு Chiang Mai பகுதியின் சாலையோரத்தில் ஒரு கூடாரத்தில் உணவுகள் பரிமாறப்பட்டு வந்திருக்கிறது. அந்த நேரத்தில் அங்கு வந்த நமது சிங்கப்பூர் கோஷ்டி, ஏற்கனவே கொடூர பசியில் இருக்க “வண்டிய விடுறா” மோடில் அங்கு குழுமியிருக்கிறது.
இதற்கு பிறகு நடந்தவற்றை, அந்த சிங்கப்பூர் கோஷ்டியில் இருந்த 5 பேரில் ஒருவரான Dilan Lau விளக்குகிறார்.
அந்த இடத்தில், ஹோட்டல் போலவே மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. உணவுகளும் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன. இதனால் நாங்கள் அதனை உணவகம் என்றே நினைத்தோம். நாங்கள் அங்கு சென்ற போது, உள்ளூர் மக்கள் எங்களை பணிவுடன் வரவேற்றனர். கையோடு அழைத்துச் சென்று ஒரு மேஜையை சுற்றியிருந்த நாற்காலியில் உட்கார வைத்தனர்.
சரி.. மெனு கேட்கலாம் என்று நினைத்தால், அங்கு மெனு கார்டு ஒன்று கூட இல்லை. எந்த செர்வரும் எங்கள் அருகில் வந்து, ‘என்ன சாப்பாடு வேண்டும்?’ என்றும் கேட்கவில்லை.
நேரம் செல்ல செல்ல அதன் பிறகு தான், நாங்கள் நுழைந்தது ஹோட்டல் கிடையாதோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழத் தோன்றியது.
அதன் பிறகு எங்களை நோக்கி வந்த ஒருவர், அவராகவே சாப்பாடுகளை பரிமாறத் தொடங்கினார். அப்போது அவரிடம், ‘இது ஹோட்டல் தானே?’ என்று தயக்கத்துடன் நாங்கள் கேட்க, அவரோ ‘இது கல்யாண விருந்து சார்’ என்று சொன்னபிறகு பக்கென்று இருந்தது.
அதற்குள் எனது நண்பர்கள் பசி மிகுதியால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாப்பிடத் தொடங்கிவிட்டனர். எனினும், நாங்கள் அங்கிருந்து எழுந்த போது, கல்யாண விருந்தில் பரிமாறிக் கொண்டிருந்தவர்கள் எங்களை தொடர்ந்து சாப்பிட வற்புறுத்தி உட்கார வைத்துவிட்டனர். நாங்கள் வேண்டாம் என்று மறுத்தும், சாப்பிட ஆரம்பித்த பிறகு எழுந்திருக்க வேண்டாம் என்று சொல்லி சாப்பிட வைத்தனர்.
அதன் பிறகு எங்களை வயிறு நிரம்ப சாப்பிட வைத்து, bye bye சொல்லி வழியனுப்பி வைத்தனர். தாய்லாந்தின் உபசரிப்பு எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது என்று Dilan Lau தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.