சிங்கப்பூரில் வேலைக்கு தேடும் ஊழியர்களுக்கு பெரிய பிரச்னையாக இருப்பது என்னவோ agent தேடுவது தான். அவர்களில் சரியான ஆளினை கண்டுபிடித்து சரியான வேலையில் உட்காருவதே பலருக்கு பெரிய போராட்டமாகி விடுகிறது. நமக்கு இருக்கும் இந்த agent சரியான ஏமாற்ற மாட்டாரா என்ற ஏகப்பட்ட சந்தேகங்கள் உங்களுக்கும் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
முதலில் வெளிநாட்டு வேலைகளில் கம்பெனிக்கும், ஊழியர்களுக்கும் பாலமாக இருப்பவர்கள் தான் agent. இவர்கள் ஒரு agentனை பிடித்து அவர்கள் சிங்கப்பூரில் இருக்கும் agent வைத்து வேலை தேடி கொடுப்பார்கள். அதற்கு கட்டணமாக லட்சங்களில் வாங்கப்படும். சிலருக்கு காசு கொடுத்தும் நிறைய ஏமாற்றங்கள் நடக்கும்.
இதையும் படிங்க: Skill அடிக்க இன்ஸ்டியூட் போறீங்களா… Aluminum Formwork பயிற்சி முதல் டெஸ்ட் வரை எப்படி இருக்கும்? சம்பளம் எவ்வளவு இருக்கும்?
இதை சரிப்படுத்து விதமாக சிங்கை மனிதவளத்துறை ஒரு விஷயத்தினை கையாண்டு இருக்கிறது. அதாவது சிங்கப்பூரில் வேலை வாங்கி தரும் அதிகாரப்பூர்வ agent லிஸ்ட்டினையே இணைத்தளத்தில் வைத்து இருக்கிறது. இது வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வீட்டு வேலைக்கு வரும் ஊழியர்கள் என இரு தரப்பாக பிரிக்கப்பட்டுள்ளது.
https://service2.mom.gov.sg/eadirectory/#tab-2 இந்த லிங்கில் சென்று சிங்கப்பூரில் அமைந்து இருக்கும் agent லிஸ்ட்டினை தெரிந்து கொள்ளுங்கள். இது வெறும் லிஸ்ட்டாக மட்டும் அமைக்கப்படாமல் மேலும் சில தகவல்களும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிங்கப்பூரில் அந்த ஏஜென்சியின் அனுபவம் என்ன? இதுவரை எத்தனை ஊழியர்களை சிங்கப்பூர் அழைத்து வந்து இருக்கிறது? என்ற தகவல்களும் இடம் பெற்று இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், சிங்கப்பூர் ஏஜென்சிக்கு அந்த தளத்திலேயே ரீவியூ கொடுக்கும் அம்சமும் இடம்பெற்று இருக்கிறது. இதனால் யாராலும் பெரிதாக ஏமாற்ற முடியாது. ரிவியூவிலேயே பெரிய அளவில் அவர்கள் குறித்து தெரிந்து விடும். வேலைக்கு வந்த எத்தனை ஊழியர்களுக்கு டிரான்சபர் வாங்கி கொடுத்தது என்பதை வரை அனைத்துமே இருக்கும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டே டெஸ்ட் அடிக்கலாமா? அதுக்கும் வழி இருக்கு? கம்மி செலவில் நல்ல லைஃப் வெயிட்டிங்!
இதுமட்டுமல்லாமல், ஏஜென்சி மீது இருக்கும் Demerit points குறித்து தெரிவிக்கப்பட்டு இருக்கும். மேலும், எந்த ஏஜென்சியாவது சிங்கப்பூரின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்பட்டு இருந்தால் அவர்களின் லைசன்ஸ் ரத்து செய்த தகவல்களும் இணையத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதிக Demerit points வாங்கி கண்காணிப்பில் இருக்கும் ஏஜென்சி குறித்த தகவல்களும் இருக்கிறது.
ஆனால் இது சிங்கப்பூர் ஏஜென்ட் தகவல்களும் மட்டுமே தானே தவிர இந்திய ஏஜென்ட்கள் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதே போன்ற லிஸ்ட்டினை இந்திய அரசு தயாரித்து வெளியிட்டால் அது வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஊழியர்களுக்கு ரொம்பவே பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.