TamilSaaga

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியரா நீங்க… Class 4 லைசன்ஸ் எப்படி எடுக்கலாம்? குழப்பமே வேணாம் இத படிங்க!

சிங்கப்பூரில் அதிக சம்பளம் கொடுக்கும் துறைகளில் ரொம்பவே பிரபலமாக இருப்பது என்னவோ டிரைவர் தொழில் தான். டிரைவராக வேலை பார்ப்பவர்களுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் இருக்கும். அதிலும் heavy வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு தான் அதிக வாய்ப்புகள். இதற்காக சிங்கப்பூரில் கொடுக்கப்பட்டு வருவது தான் Class 4 லைசன்ஸ். இதை எப்படி எடுப்பது? என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முன்பே சொன்னது போல heavy vehicle(கனரக வாகனங்கள்) ஓட்டும் ஓட்டுநர்களுக்கு தான் Class 4 லைசன்ஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. class 4 லைசன்ஸ் எடுப்பதற்கு மிகப்பெரிய வழிமுறை இருக்கும். class 3 லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் வைத்து எளிதாக மாற்றிக்கொள்ளலாம். மேலும், வொர்க் பெர்மிட் வைத்திருந்தால் class 4 லைசன்ஸ் கிடைக்காது. கண்டிப்பாக SPass ஊழியர்கள் மட்டுமே அதிலும் உங்கள் பெர்மிட்டில் டிரைவர் என்று மட்டுமே குறிப்பிட்டு இருக்க வேண்டும். உங்களின் வயதும் 21க்கு அதிகமாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் ட்ரைவருக்கு வேலைவாய்ப்பு (Jobs in Singapore) எப்படி இருக்கும்? அப்ளே செய்ய என்னென்ன Documents வேணும்.. இத படிங்க முதல!

நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனியில் கண்டிப்பாக heavy vehicle இருக்க வேண்டும். அதைப்போன்று பெர்மிட்டின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு மேல் இருக்க வேண்டும். சிங்கப்பூரில் இருக்கும் woodlands சென்டரில் மட்டுமே class 4 லைசன்ஸ் எடுக்க முடியும். இது மட்டுமே அரசு சார்ந்த நிறுவனம். ஆனால் தனியார் நிறுவனங்கள் நடத்தும் சென்டர்கள் மேலும் சில செயல்பட்டு வருகிறது. உங்க ஏரியாவிற்கு அருகில் விசாரித்தால் தெரியலாம்.

class 4 லைசன்ஸ் எடுக்க 1300 முதல் 1400 வரை சிங்கப்பூர் டாலர் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது உங்களின் கிளாஸ், தேர்வு, PDL, போக்குவரத்து செலவு என எல்லாமே அடங்கி விடும். மேலும் கண்டிப்பாக 8 கிளாஸில் கலந்து கொள்ள வேண்டியது ரொம்பவே முக்கியம். இதில் ஒன்றை கூட மிஸ் செய்ய கூடாது. அப்போது தான் உங்களால் தேர்வு எழுத முடியும். ஃபெயில் ஆனால் மீண்டும் 200 முதல் 500 சிங்கப்பூர் டாலர் வரை செலவுகள் இருக்கும். அதற்கும் 2 வகுப்புகள் தனியாக கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வரும் இந்திய தொழிலாளர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் Driving License எடுக்க PDL கட்டாயமா? – எளிமையாக Online மூலம் Apply செய்வது எப்படி?

தேவைப்படும் ஆவணங்கள்:

  • ஒரிஜினல் பாஸ்போர்ட்
  • கம்பெனியில் இருந்து லெட்டர்( class 4 லைசன்ஸ் எடுக்க அனுப்பப்படுவதாக கூறிப்பட்டு இருக்க வேண்டும்
  • SG appல் எடுக்கப்பட்ட உங்களின் வொர்க் பாஸின் காப்பி
  • validity இருக்கும் class 3 லைசன்ஸ்

இதைத்தொடர்ந்து, சென்டரில் சென்று ஆவணங்களை கொடுத்து அட்மிஷன் போட்டால் தொடர்ந்து வகுப்புகள் புக் செய்யலாம். வகுப்பு முடிந்தவுடன் டெஸ்ட் எழுதி பாஸானால் class 4 லைசன்ஸ் கிடைத்து விடும். தேர்வு சாய்ஸ் டிக் செய்வது போல தான் இருக்கும். மேலும் கண்டிப்பாக கம்பெனியின் அனுமதியுடன் தான் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts