TamilSaaga

விமானத்தின் கழிவறை குப்பைத் தொட்டியில் அன்று பிறந்த குழந்தை : அதிர்ந்துபோன அதிகாரிகள் – தாய் எங்கே?

2022ம் ஆண்டு பிறந்துவிட்டது, நவநாகரீகம் வானை முட்டும் அளவில் வளர்ந்தும்விட்டது. ஆனால் குப்பைதொட்டியில் குழந்தையை போடும் அந்த மனிதாபியமானமற்ற கலாச்சாரம் தான் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. இந்த நிலையில் தான் மொரிசியஸ் நாட்டில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மொரிசியஸ் நாட்டில் உள்ள Sir Seewoosagur Ramgoolam பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமானம் ஒன்றில் அந்த விமானத்தின் கழிவறையின் குப்பைத் தொட்டியில் ரத்தத்தில் நனைந்து டாய்லெட் பேப்பரால் மூடப்பட்டு கிடந்துள்ளது புதிதாக பிறந்த சிசு. விமானம் தரையிறங்கிய பிறகு விமான ஊழியர்கள் தங்களின் இயல்பான சரிபார்ப்பு பணிக்கு விமானத்தை சோதித்தபோது கழிவறை குப்பைதொட்டி ரத்தத்தால் முடியிருப்பதை கண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் Construction, Welding, Electrical துறைகளில் அதிக அளவில் வேலைவாய்ப்பு – Chinese நிறுவனத்தில் வேலை

ஜனவரி 1ம் தேதி Sir Seewoosagur Ramgoolam பன்னாட்டு விமான நிலையத்திற்கு தரையிறங்கிய ஏர் மொரிஷியஸ் விமானத்தில் அந்த குழந்தையை பெற்றதாக சந்தேகிக்கப்படும் Madagascar நாட்டை சேர்ந்த 20 வயது பெண் கைது செய்யப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும் BBC செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சுங்கச் சோதனைக்காக விமானத்தைத் சோதனை செய்தபோது குழந்தையைக் கண்டதாக சிட்டிஸ் நியூஸ்ரூம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் பயணத்தை தடுத்து நிறுத்திய ஏர்லைன்ஸ்.. தற்கொலை மனநிலைக்கு சென்ற இளைஞர் – இறுதியில் கைக் கொடுத்த Indigo

ரத்த வெள்ளத்தில் டாய்லட் பேப்பர் கொண்டு சுத்தப்பட்ட அந்த குழந்தையை கண்டதும், அதிர்ந்த அதிகாரிகள் சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அந்த சிசுவை கொண்டுசென்று கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்திற்குரிய அந்த தாய், அந்த ஆண் குழந்தை தன்னுடையது அல்ல என்று கூறி முதலில் மறுத்துள்ளார். ஆனால் அதன் பிறகு அந்த தாய் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சோதனைகளில் அந்த குழந்தை அவருடையது தான் என்று ஊர்ஜிதமாகியுள்ளது. தற்போது அந்த பெண் மருத்துவமனையில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை வரம் கேட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு சென்று வரும் இந்த Digital உலகில் மேலைநாடுகளிலும் கூட இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது பெரும் வருத்தத்தை அளிக்கின்றது என்று சமுகுங் ஆரவாளர்கள் குமுறுகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts