TamilSaaga

சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு ஊழியரா நீங்க… உங்களுக்கு சொந்த ஊர் செல்ல கம்பெனி எத்தனை நாள் லீவ் கொடுக்க வேண்டும்… டிக்கெட் யாருடைய செலவு தெரியுமா?

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்னென்ன விடுமுறைகள் கிடைக்கும். ஊருக்கு செல்வதாக இருந்தால் ஒரு வருடத்தில் எத்தனை நாள் லீவு கிடைக்கும். இதை பத்தி தெரிஞ்சுக்கணுமா தொடர்ந்து படிங்க.

விடுமுறைனா எல்லாருக்குமே பிடிக்கும். அது பிடிக்காத ஆளு இங்கு யாருமே இல்லை. சொந்த ஊரில் இருப்பவர்களுக்கு சரி. வேலைக்காக சொந்த நாட்டை விட்டு சிங்கப்பூர் வந்திருக்கும் இந்தியர்களுக்கு இந்த விடுமுறை நாள் எப்படி அமையும்.

சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 11 நாள் அரசு விடுமுறை இருக்கும். தீபாவளி லீவு இருக்காது. பொங்கல், முஸ்லீம் பண்டிகை, கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் விடுமுறை இருக்கும். இந்த நாட்களில் நீங்க வேலை செய்தால் கம்பெனிகள் உங்களுக்கு இரட்டை சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனா, சில கம்பெனிகள் விடுமுறை நாட்களில் வர சொல்லியும் ஒருநாள் சம்பளத்தை மட்டுமே கொடுக்கிறார்கள். சிங்கப்பூர் சட்டப்படி உங்களுக்கு இரண்டு நாள் சம்பளத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த நாளில் வேலையை செய்யாதீர்கள். உங்களை கட்டாயப்படுத்தி அவர்கள் வேலை செய்ய வைக்கக் கூடாது.

விடுமுறை விடுத்து சொந்த நாட்டுக்கு செல்ல ஒரு வருடத்திற்கு 7 நாட்கள் லீவு தருவார்கள். இரண்டு வருடத்திற்கு 14 நாட்கள் லீவுடன் சம்பளமும் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு மேல் லீவ் எடுத்தால் மட்டுமே சம்பள பிடித்தம் செய்வார்கள். ஆனால் இந்த லீவு எத்தனை நாள் கொடுக்கலாம் என்பதை புராஜட் மேனஜர் தான் முடிவு செய்வார்கள். சில கம்பெனிகள் ஒரு மாதம் கூட லீவ் கொடுத்து சம்பளமும் போடுவார்கள்.

3 வருடம் கழித்து ஊருக்கு போகும் ஊழியர் என்றால் உங்களுக்கு ஒரு வழி டிக்கெட்டினை கம்பெனி போட்டு கொடுப்பார்கள். வரும் போது நீங்க டிக்கெட் போட்டுக்கொள்ள வேண்டும். சில கம்பெனிகள் தான் இதை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பெனிகளை பொறுத்து இந்த விடுமுறைகளிலும் சில நாள் கூடவோ, குறையவோ செய்யும். சிங்கப்பூரில் இருக்கும் இளைஞர்கள் திருமண விடுமுறை குறைந்த பட்சம் 45 நாட்கள் கொடுத்து விடுவார்கள். அதிகபட்சமாக 3 மாதம் வரை லீவ் கிடைக்கும். இதற்கு நீங்க எத்தனை வருடம் இருந்தீர்கள் என்பதெல்லாம் கணக்கு பார்க்க மாட்டார்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts